close
Choose your channels

நேற்று வெளியான 'எம்புரான்' 'வீரதீர சூரன்' முதல் நாள் வசூல் எவ்வளவு?

Friday, March 28, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று மோகன்லால் நடித்த ‘எம்புரான்’ மற்றும் விக்ரம் நடித்த "வீர தீர சூரன்" ஆகிய இரண்டு படங்கள் வெளியாகியுள்ளன. இப்போது, இந்த படங்கள் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளன என்பதை பார்ப்போம்.

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான ‘எம்புரான்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று வெளியானது. முதல் நாளில் மட்டும் இந்த படம் ரூ.22 கோடி வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மலையாளத் திரை உலகில் இதுவரை அதிக வசூல் செய்த முதல் நாள் வசூல் இந்த படத்திற்கே என்று குறிப்பிடப்படுகிறது.

இதற்கு முன்பு பிரித்திவிராஜ் இயக்கிய "ஆடு ஜீவதம்" திரைப்படம் சுமார் 9 கோடியும், "லூசிபர்" 6 கோடியும் வசூல் செய்திருந்தன. ஆனால் ‘எம்புரான்’ திரைப்படம் பல மடங்கு அதிகமாக வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், விக்ரம் நடித்த "வீரதீர சூரன்" திரைப்படம் முதல் காட்சி முடிந்தவுடன் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இருப்பினும், இந்த படம் நேற்று மாலை தான் வெளியானதால், முதல் நாளில் வெறும் இரண்டு காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டன. இதனால் இந்த படம் நேற்று ரூ.3.25 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக, இன்று அனைத்து திரையரங்களிலும் "வீரதீர சூரன்" ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுகிறது. இதனால், வார இறுதி வசூல் மிகப்பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment