விக்ரமின் 'வீர தீர சூரன்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்.. புக்கிங் ஆரம்பம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


விக்ரம் நடிப்பில் உருவான ‘வீர தீர சூரன்’ திரைப்படம் வரும் மார்ச் 27ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் விவரங்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் நடிப்பில், அருண்குமார் இயக்கத்தில் உருவான ‘வீர தீர சூரன்’படத்தின் இரண்டாம் பாகம் மார்ச் 27ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ரிலீசான பின்னரே முதல் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்பட்டது.
இந்த நிலையில், ‘வீர தீர சூரன்’படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து, தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்வையிட்டு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
மேலும், இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 42 நிமிடங்கள் (அதாவது 162 நிமிடங்கள்) என தகவல் வெளியாகியுள்ளது. ஒரு அதிரடி ஆக்சன் படத்திற்கேற்ப சரியான ரன்னிங் டைம் என்பதால், இந்த படம் நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம் ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ள இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சூரஜ் ,சித்திக் உட்பட பலரும் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
#VeeraDheeraSooran censored U/A - #Kaali aatam in theatres from this March 27th!
— HR Pictures (@hr_pictures) March 22, 2025
An #SUArunKumar Picture 🎬
A @gvprakash musical 🪈🎶
Produced by @hr_pictures @riyashibu_ @chiyaan @iam_SJSuryah #surajvenjaramoodu @officialdushara @thenieswar @editor_prasanna @5starsenthilk… pic.twitter.com/cNh2zEIMkm
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments