விக்ரமின் சம்பவம் ஆரம்பம்.. 'வீர தீர சூரன்' முதல் நாள் படப்பிடிப்பு வீடியோ..! யார் யார் கலந்து கொண்டார்கள்?

  • IndiaGlitz, [Saturday,April 27 2024]

விக்ரம் நடிக்க இருக்கும் ’வீர தீர சூரன்’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தின் மூன்று நிமிடம் முன்னோட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில் படப்பிடிப்பு தொடங்கிய வீடியோவை படக்குழுவினர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் படப்பிடிப்புக்கு வரும் விக்ரம் முதலில் கேரவன் செல்வது போன்றும், அதன்பின் படப்பிடிப்புக்கு வரும் துஷாரா விஜயன் கேரவனுக்கு செல்வது போன்றும் இருவரும் மேக்கப் போட்டு விட்டு திரும்பி வந்தவுடன் முதல் காட்சியை இயக்குனர் அருண்குமார் படமாக்கியதும் இந்த வீடியோவில் உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது என உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் மிக குறைந்த நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்க இருக்கும் நிலையில் அவருடைய காட்சியின் பட படிப்பை விரைவில் படமாக்கப்படும் என்று தெரிகிறது. சமீபத்தில் இந்த படத்தில் மலையாள நடிகர் சித்திக் இணைவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் வேறு சில முக்கிய நட்சத்திரங்களும் இணையும் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிவி பிரகாஷ் இசையில், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தை ஹெச்ஆர் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சுகாதாரமற்ற சானிடரி நாப்கினால் ஏற்படும் புற்றுநோய் ஆபத்து!

பெண்கள் தங்களுடைய வாழ்நாளில் மொத்தமாக 10,000 முதல் 18,000 வரை நாப்கின்களை பயன்படுத்துகின்றனர்...

நானும் மாஸ்டர் போட்ட விதைதான்.. கல்லூரி பெண்களின் எமோஷனல் வீடியோ..!

நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் பல ஏழை எளிய குழந்தைகளை படிக்க வைத்துள்ளார் என்பதும் அந்த குழந்தைகள் தற்போது பெரியவர்களாகிய நல்ல நிலையில் இருக்கும்

தேர்தலில் வாக்களிக்க வரிசையில் நின்ற போது அஜித் கண்ணீர் விட்டாரா? என்ன காரணம்?

கடந்த 19ஆம் தேதி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்த போது நடிகர் அஜித் காலை 7 மணிக்கு சென்று வாக்களித்தார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள்

அப்பா-மகளா? நெருங்கிய நண்பர்களா? கமல்ஹாசன் - ஸ்ருதிஹாசனின் உரையாடல் வீடியோ..!

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் அவரது மகள் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் உரையாடும் வீடியோ ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள

இன்று சந்தானம், நாளை கவின்.. அடுத்தடுத்து வரும் அப்டேட்டுகள்.. இன்னும் ஒரு வாரத்தில் செம்ம விருந்து..!

வரும் மே 10ஆம்  தேதி சந்தானம் நடித்துள்ள 'இங்கு நான் தான் கிங்கு' மற்றும் கவின் நடித்த 'ஸ்டார்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில் இந்த இரண்டு படங்களின்