நயன்தாராவின் இந்த படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறதா?

  • IndiaGlitz, [Tuesday,February 23 2021]

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரமுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதல் முதலாக நடித்த ’இருமுகன்’ திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

சியான் விக்ரம் இரண்டு வேடங்களில் நடித்த திரைப்படம் ’இருமுகன்’. இந்த படத்தில் நயன்தாரா மற்றும் நித்யா மேனன் ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்து இருந்தனர் என்பதும் விக்ரம் நாயகன் மற்றும் வில்லன் வேடத்தில் நடித்திருந்த இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார் என்பதும் தெரிந்ததே. இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கிய இந்த படத்தை சிபுதமீன்ஸ் தயாரித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த முறையான அறிவிப்பு மற்றும் நடிகர் நடிகை இயக்குனர் உள்பட முக்கிய அறிவிப்புகள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இருமுகன் படத்தின் ஹிந்தி ரீமேக்கையும் ஆனந்தசங்கர் இயக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் தற்போது விஷால் மற்றும் ஆர்யா நடித்து வரும் ’எனிமி’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துபாயில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

More News

விஸ்வரூப தரிசனத்தை ஒரே இடத்தில் தரிசிப்பதற்கான வாய்ப்பு: கமல்ஹாசன் டுவீட்

44 ஆண்டுகளாக கலாச்சார நிகழ்வு நடைபெற்று வரும் தமிழின் மாபெரும் அறிவியக்கத்தின் விஸ்வரூப தரிசனத்தை ஒரே இடத்தில் தரிசிக்க வாருங்கள் என கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார் 

சென்னையின் நீர் பாதுகாப்புக்காக புதிய நீர்க்குழுமம்- பட்ஜெட்டில் ஓபிஎஸ் அறிவிப்பு!

சென்னையில் ஆண்டுதோறும் கோடை காலங்களின்போது குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பாகவே மாறிவிட்டது.

மொழிவாரி சிறுபான்மையினர் முன்னேற்றம்… தனி நிறுவனம் அமைத்து தமிழக அரசு அதிரடி!

அதிமுக எப்போதும் சிறுபான்மையினர் நலனுக்காகவே செயல்படும் என்றும் ஒருபோதும் சிறுபான்மையினருக்கு எதிராக இயங்காது என்றும் தமிழக முதல்வர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார்.

ஐபிஎல் தொடங்க உள்ள நிலையில் டேவிட் வார்னருக்கு இப்படியொரு சிக்கலா?

14 ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் தொடங்கும் என பிசிசிஐ தெரிவித்து இருக்கிறது

தாய் செல்போன் தராததால் 6 ஆம் வகுப்பு மாணவன் செய்த விபரீதம்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே தாய் செல்போன் தராததால் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.