close
Choose your channels

'கோப்ரா' படத்தில் விக்மிரமின் ஒரு கெட்டப்: ஆச்சரியத்தின் உச்சத்தில் ரசிகர்கள்!

Saturday, June 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் நடிப்பில் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோப்ரா’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்து விட்டது என்பதும் லாக்டவுன் முடிந்தவுடன் மீதி படப்பிடிப்பை முடித்துவிட்டு ரிலீஸ் தேதியை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் விக்ரம் 8 வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதுகுறித்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்ரம் படத்தின் ஒர்க்கிங் ஸ்டில்லை வெளியிட்டுள்ளார். அதில் விக்ரம் மேக்கப் ரூமில் கண்ணாடி முன் உட்கார்ந்து இருப்பது போலவும் அவருக்கு காட்சியை இயக்குனர் அஜய் ஞானமுத்து விளக்குவது போன்றும் உள்ளது. அந்த புகைப்படத்தில் விக்ரமின் கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் மிரண்டுபோய் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று உள்ளனர். ஒரு திரைப்படத்தில் உள்ள கேரக்டருக்காக மெனக்கிடுவது விக்ரமுக்கு இணை வேறு யாருமில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கும் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.