close
Choose your channels

'மாஸ்டர்', 'பேட்ட' படங்களுடன் கனெக்சன் ஆகும் விக்ரமின் அடுத்த படம்

Monday, June 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம் தற்போது ’கோப்ரா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது என்பதும் தெரிந்ததே. கொரோனா வைரஸ் பரபரப்பு முடிந்தவுடன் ஒரே மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சியான் விக்ரம் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், தற்போது தனுஷின் ‘ஜெகமே தந்திரம்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். லாக்டவுன் முடிந்ததும் இந்த படம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் சமிபத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், விக்ரமுக்கு ஒரு கதை கூறியதாகவும் அந்த கதை விக்ரமும் மிகவும் பிடித்து விட்டதால் அந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ‘மாஸ்டர்’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் லலித் தயாரிக்கவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிகிறது ஏற்கனவே ’’பொன்னியின் செல்வன்’ படத்திலும் சியான் விக்ரம் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.