close
Choose your channels

விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு செம நியூஸ்.. விரைவில் ரிலீஸாகும் மாஸ் திரைப்படம்..!

Tuesday, February 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வரும் ’துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது சில காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாக தகவல் வெளியானது.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் இதனையடுத்து தற்போது ’துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விக்ரம் ரசிகர்களுக்கு இது சூப்பர் நியூஸ் ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகிய இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிய இந்த படம் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு ஆக்ஷன் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.