விக்ரம்பிரபுவின் 'சத்ரியன்' ஓப்பனிங் வசூல் எப்படி?

  • IndiaGlitz, [Monday,June 12 2017]

விக்ரம்பிரபு, மஞ்சிமாமோகன் நடிப்பில் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான 'சத்ரியன்' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனத்தை பெற்றபோதிலும் தமிழகம் முழுவதும் நல்ல ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளது. போட்டிக்கு பெரிய படங்கள் இல்லாததால் இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருந்ததாக விநியோகிஸ்தர்கள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

சென்னையை பொருத்தவரையில் 'சத்ரியன்' திரைப்படம் கடந்த வார இறுதி நாட்களில் 21 திரையரங்குகளில் 196 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.56,44,890 ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளது. மேலும் இந்த படத்திற்கு 85% பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர். இன்று முதல் அனைத்து திரையரங்குகளிலும் வசூலாகும் தொகையை வைத்தே இந்த படத்தின் வெற்றி உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கடந்த வெள்ளியன்று வெளியான மற்றொரு படமான கெளதம் கார்த்திக்கின் 'ரங்கூன்' திரைப்படம் கடந்த வாரம் சென்னையில் 20 திரையரங்குகளில் வெளியாகி 175 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.39,09,120 வசூலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பாகுபலி 2: 7வது வாரத்திலும் எழுச்சிமிகு வசூல். ரூ.20 கோடியை நெருங்கிய 'பாகுபலி 2'

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்பட பலர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி ரூ.1700 கோடி வசூலை நெருங்கி வருகிறது.

சென்னை சில்க்ஸ் கட்டிட இடிப்புப் பணியில் தொழிலாளி உயிரிழப்பு

சில வாரங்களுக்கு முன் சென்னை தியாகராய நகரில் உள்ள பிரம்மாண்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டு தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது..

தினகரன் பின்னால் எம்.எல்.ஏக்கள் செல்வது ஏன்? துக்ளக் ஆசிரியர் விளக்கம்

திஹார் ஜெயிலில் இருந்து ஜாமீன் பெற்று திரும்பி வந்த டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சுமார் 30 எம்.எல்.ஏக்கள் சென்றுள்ளதால் தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் பஞ்ச் டயலாக்கை நடைமுறையில் செய்து காட்டிய விஜய்சேதுபதி

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தில் இடம்பெற்ற ஒரு பஞ்ச் டயலாக் 'இன்னைக்கு நிறைய...

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் கோடை வெயில் கடந்த சில மாதங்களாக கொளுத்தி வந்த நிலையில் சமீபத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்துள்ளது.