close
Choose your channels

விக்ரம் பிரபு நடிக்கும் உண்மைச்சம்பவம் கதை: டைட்டில் & ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

Tuesday, May 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான விக்ரம்பிரபு நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி உள்ளது .

பிரபுசாலமன் இயக்கத்தில் உருவான ’கும்கி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு ’அரிமா நம்பி’ ’சிகரம் தொடு’ ’வெள்ளைக்கார துரை’ உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகர் விக்ரம் பிரபு. இவரது நடிப்பில் உருவான ’டாணக்காரன் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பாயும் ஒளி நீ எனக்கு’ ’பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்துள்ள விக்ரம் பிரபுவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் சற்று முன் விக்ரம் பிரபு நடிக்கும் படத்திற்கு ’இரத்தமும் சதையும்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதோடு, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஹரிந்தர் பாலச்சந்தர் என்பவர் இயக்கவிருக்கிறார். உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.