விக்ரம் பிரபுவின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு: நாயகி யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,February 01 2022]

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாரிசான விக்ரம்பிரபு நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் நாயகி மற்றும் இயக்குனர் குறித்த தகவலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் பிரபுவின் மகனான விக்ரம் பிரபு, ‘கும்கி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் அரிமா நம்பி ,வெள்ளைக்கார துரை, சிகரம்தொடு உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர், ‘பாயும் புலி நீ எனக்கு’, ‘டாணாக்காரன்’ மற்றும் ’பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று நடந்தது.

விக்ரம்பிரபு ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் டைட்டில் ’டைகர்’ என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை கார்த்திக் என்பவர் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் பிரபு மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகிய ஏற்கனவே ’வெள்ளைக்கார துரை’ என்ற திரைப்படத்தில் நடித்து உள்ளனர் என்பது தெரிந்ததே.
 

More News

'மாநாடு' திரைப்படத்தின் தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் இணைந்த சூரி!

சமீபத்தில் வெளியான சிம்புவின் 'மாநாடு' படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து சூப்பர் ஹிட் வெற்றி படமாக்கிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி என்பது தெரிந்ததே.

குழந்தையுடன் குழந்தையாக மாறிய ஸ்ரேயா சரண்: க்யூட் புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான ஸ்ரேயா சரண் தனது மகளுடன் குழந்தையோடு குழந்தையாக சுட்டித்தனத்துடன் விளையாடும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக வருகிறது.

தாமரை கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்த பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் பிரபலமான நாடக கலைஞர் தாமரைசெல்வி, தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டுள்ளார் என்பதும்

பிக்பாஸ் அல்டிமேட்: இருவரும் முன்னாள் காதலர்களா? மாறி மாறி நாமினேஷன் செய்ததால் பரபரப்பு!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் இரண்டு போட்டியாளர்கள் முன்னாள் காதலர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அது மட்டுமின்றி இருவருமே மாறி மாறி ஒருவரை

இந்த வாரம் நாமினேஷனில் சிக்கியவர்கள் யார் யார்?  முழு விபரங்கள்

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் படலம் நடைபெறும் நிலையில் இந்த வாரம் போட்டியாளர்கள் எந்த இரு போட்டியாளர்களை நாமினேஷன் செய்தனர் என்ற விவரங்களை தற்போது பார்ப்போம்.