விக்ரம் பிரபுவின் 'பாயும் ஒளி நீ எனக்கு': அதிரடி ஆக்சன் படத்தின் டீசர் ரிலீஸ்!

  • IndiaGlitz, [Monday,June 27 2022]

விக்ரம் பிரபு நடித்த ’டாணாக்காரன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் நடித்த அடுத்த திரைப்படமான ’பாயும் ஒளி நீ எனக்கு’ என்ற படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதிரடி ஆக்சன் படங்களை பெரும்பாலும் தேர்வு செய்து நடித்து வ்ரும் விக்ரம் பிரபு மற்றொரு ஆக்சன் படத்தை தேர்வு செய்து நடித்துள்ளார். சற்று முன் வெளியான இந்த டீசரின் ஒரு நிமிட காட்சியும் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகளே உள்ளதால் ஆக்சன் ரசிகர்களுக்கு விருந்தாக இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் பிரபு, வாணிபோஜன், தனஞ்செயா, விவேக் பிரசன்னா உள்படபலர் நடிப்பில் உருவாகி இந்த படத்தை கார்த்திக் அத்வைத் என்பவர் இயக்கியுள்ளார். சாகர் இசையில், ஸ்ரீதர் ஒளிப்பதிவில் கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கார்த்திக் மூவி ஹவுஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கார்த்தி-விஜய்சேதுபதி படத்தின் டைட்டில் இந்த நாட்டின் பெயரா?

நடிகர் கார்த்தி நடித்த 'விருமன், 'பொன்னியின் செல்வன்' மற்றும் 'சர்தார்' திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தின் தகவல்கள் கசிந்துள்ளன. 

சசியின் 'பூ' படத்தில் நடித்த நாடக நடிகருக்கு மாரடைப்பு: தமிழ் நடிகர் தகவல்

பிரபல இயக்குனர் சசி நடித்த 'பூ' என்ற திரைப்படத்தில் நடித்த வீதி நாடக கலைஞர் மாரடைப்பு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழ் நடிகர்

ஷாருக்கான் - அட்லி படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமை இத்தனை கோடியா?

ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜவான்' படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமைக்கான தொகை குறித்த தகவல் வெளியாகி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

தர்ஷா குப்தாவா இது? உச்சகட்ட கிளாமர் வீடியோவால் சொக்கி போன ரசிகர்கள்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள வீடியோவில் உச்சகட்ட கிளாமராக இருப்பதை பார்த்து ரசிகர்கள் சொக்கி போயுள்ளனர். 

பிரபாஸ் படத்தில் நடிக்க ஒரே ஒரு கண்டிஷன் போட்ட முன்னணி ஹீரோ!

பிரபாஸ் படத்தில் நடிக்க ஒரே ஒரு கண்டிஷன் முன்னணி ஹீரோ போட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.