close
Choose your channels

விக்ரம்பிரபுவின் 'வாஹா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Wednesday, June 15, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திரையுலக வாரீசான விக்ரம்பிரபு 'கும்கி' முதல் ''இது என்ன மாயம்' வரை பல வெற்றிப்படங்களில் நடித்தவர். இந்நிலையில் விக்ரம்பிரபு 'வாஹா' மற்றும் 'வீரசிவாஜி' ஆகிய இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வந்தார்.
தற்போது 'வாஹா' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் சற்று முன்னர் சமூக இணையதளங்களில் வெளிவந்துள்ளது. இதே தேதியில்தான் விக்ரம் நடித்து வரும் 'இருமுகன்' படமும் வெளியாக வாய்ப்பு உள்ளதாக நேற்று பார்த்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம்பிரபு, ரான்யா ராவ், துளசி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை விஜய் பைரவி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.