close
Choose your channels

'விக்ரம்' ரோலக்ஸ் - 'கைதி' டெல்லி சந்திப்பு நடக்குமா? கார்த்தியின் பதில்!

Thursday, October 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’விக்ரம்’ படத்தில் உள்ள ரோலஸ் கேரக்டர் மற்றும் ’கைதி’ படத்தில் உள்ள டெல்லி கேரக்டர் சந்திப்பு நடக்குமா என்ற கேள்விக்கு நடிகர் கார்த்தி பரபரப்பான பதிலளித்துள்ளார்.

நடிகர் கார்த்தி நடித்த ’சர்தார்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஆந்திராவில் நடந்த நிலையில் ரோலக்ஸ் மற்றும் டெல்லி கேரக்டர்கள் சந்திப்பு எப்போது? என்ற கேள்வி எழுப்பப்பட்டது

இதற்கு பதில் கூறிய நடிகர் கார்த்தி ’அது லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு மட்டும் தான் தெரியும், எனக்கு தெரியாது. ஆனால் ஒன்றை என்னால் உறுதியாக சொல்ல முடியும். அடுத்த வருடம் ’கைதி 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து ‘கைதி 2’ படம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

லோகேஷ் இயக்கிய ‘விக்ரம்’ படத்தில் ‘டெல்லி’ மற்றும் ‘ரோலக்ஸ்’ கேரக்டர்கள் இணைந்ததை அடுத்து அவருக்கு ரசிகர்கள் LCU என்னும் ’லோகேஷ் சினிமா யுனிவர்ஸ் என்ற பட்டத்தை அளித்துள்ளனர்.

இந்த பட்டத்திற்கு ஏற்றவாறு ‘தளபதி 67’, ’விக்ரம் 3’ மற்றும் ’கைதி 2’ ஆகிய படங்களில் அவரது முந்தைய படங்களின் கேரக்டர்கள் சந்திக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.