close
Choose your channels

கடினமாக இருந்த 'தங்கலான்' படப்பிடிப்பு.. 'பேக்கப்' சொன்னதும் விக்ரம் செஞ்ச வேலையை பாருங்க!

Tuesday, December 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் ’தங்கலான்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒகேனக்கல் அருகே நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடித்த படக்குழுவினர் ஒகேனக்கல் அருவியில் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் விக்ரம், பா ரஞ்சித் உள்பட படக்குழுவினர் உள்ளனர். இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் விக்ரம் பதிவு செய்து கூறியிருப்பதாவது:

இன்று ஒகேனக்கல் அருகில் தங்கலான் படப்பிடிப்பு கடினமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. தண்ணீர் வா வா என்று அழைத்தது. பேக்கப் என்று கேட்டதும் ஒரே குதி.. தண்ணீரில். என் நண்பர்களை விடுவேனா என்ன?!அய்யோ வேண்டாம் என்று பதறிய சிலர் கடைசியில் தண்ணீரை விட்டு வர மறுத்துதான் மிச்சம் என்று பதிவிட்டுள்ளார்.

கோலார் தங்க வயல் குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். பான் இந்தியத் திரைப்படமாக வெளியாக உள்ள இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கிய படமாக இருக்கும் என கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.