விக்ரம்-விஜய்சந்தர் படத்தின் டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,April 07 2017]

சியான் விக்ரம் மற்றும் 'வாலு' இயக்குனர் விஜய்சந்தர் இணைந்து உருவாக்கி வரும் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளிவரும் என்ற தகவலை ஏற்கனவே பார்த்தோம். அதன்படி சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு 'ஸ்கெட்ச்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்கெட்ச் போட்டு தூக்க வேண்டும் என்று வழக்கமாக கூறப்படும் நிலையில் அந்த 'ஸ்கெட்ச்' என்ற வார்த்தை தற்போது விக்ரமின் அடுத்த பட தலைப்பாகியுள்ளது. இந்த படத்தில் விக்ரம், வடசென்னையில் உள்ள கேங்க்ஸ்டர் தலைவராக நடித்து வருவதாக கூறப்படுவதால் இந்த தலைப்பு படத்தின் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என கருதப்படுகிறது. இருப்பினும் தமிழக அரசின் வரிவிலக்கை பெற, கடைசி நேரத்தில் தலைப்பில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

விக்ரம், தமன்னா முதல்முறையாக ஜோடி சேரும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்து வருகிறார்கள். சென்னையை சுற்றி இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

என்கிட்டே எதுவும் இல்லை. அவங்களா பார்த்து ஏதாவது கொடுத்துட்டு போனால்தான் உண்டு. ரெய்டு குறித்து சரத்குமார்

பிரபல நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையில் சிக்கியது என்ன? என்பது குறித்து மாலை தெரியும் என்று வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...

எனக்கு விருது கிடைத்ததில் தமிழுக்குத்தான் பெருமை. வைரமுத்து

64வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா நடித்த 'தர்மதுரை' படத்தில் கவியரசர் வைரமுத்து எழுதிய 'எந்த பக்கம்' என்ற பாடலுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது...

64வது தேசிய விருதுகள் முழுவிபரம்

64வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. விருதுகளின் முழு விபரத்தை தற்போது பார்ப்போம்...

திருமணத்திற்கு முன்பே நந்தினிக்கு அபார்ஷன். கார்த்திக் தாயாரின் திடுக்கிடும் குற்றச்சாட்டு

பிரபல தொலைக்காட்சி நடிகை நந்தினியின் கணவர் கார்த்திக் தற்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சூர்யாவின் '24' பட கலைஞருக்கு தேசிய விருது

இந்த ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் சிறந்த தமிழ் படமான அனைவரும் எதிர்பார்த்த ராஜூமுருகனின் 'ஜோக்கர்' படம் அறிவிக்கப்பட்டுள்ளது...