மீண்டும் இணையும் 'விக்ரம்' கூட்டணி: இயக்குனர், தயாரிப்பாளர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,November 17 2022]

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது உலகம் முழுவதும் இந்த படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘விக்ரம்’ படத்தில் இணைந்து நடித்த கமல் ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் தற்போது ’இந்தியன் 2’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடித்ததும் அவரது 233 வது படத்தை எச் வினோத் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் கமல்ஹாசன் நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் வெளிவந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி, வினோத் ஆகிய மூவரும் இணையும் இந்த கூட்டணி மீண்டும் ‘விக்ரம்’ போன்ற சாதனை படத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நயன்தாராவின் இரட்டை குழந்தைகளை நேரில் பார்த்து வாழ்த்திய பிரபல நடிகை: வைரல் புகைப்படம்!

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு சமீபத்தில் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைகளை நேரில் சந்தித்த பிரபல நடிகை ஒருவர் வாழ்த்துக்களை

படம் பார்த்த பிறகு டைட்டில் சரிதான்னு தோணுச்சு: 'கலகத்தலைவன்' குறித்து உதயநிதி

உதயநிதி நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கலகத்தலைவன்' திரைப்படம் வரும் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக

சிறுநீர் கேட்கும் ரக்சிதா.. செய்வதறியாது திணறும் ராபர்ட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரண்மனை டாஸ்க் நடைபெற்று வரும் போது நிலையில் இந்த டாஸ்க்கில் ராணியாக நடித்து வரும் ரக்சிதா, சிறுநீர் வேண்டும் என கேட்க, அதனால் அரசர் வேடத்தில் இருக்கும்

நயன்தாரா, ஹன்சிகாவை அடுத்து தமன்னாவுக்கு திருமணம்? மாப்பிள்ளை யார் தெரியுமா?

 தமிழ் திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்த நிலையில் அடுத்த மாதம் இன்னொரு பிரபல நடிகையான ஹன்சிகாவுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்

பிக்பாஸ் தமிழ்: இன்றைய அசீம் செயலால் வாக்குகள் சரியுமா? 

கடந்த சில வாரங்களாக அசீம் நாமினேஷன் பட்டியலில் இருந்தாலும் முதல் நபராக சேவ் ஆகி வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். முதல் இரண்டு வாரங்கள் அவரது செய்கை சற்று மோசமாக இருந்தாலும்