நேரடியாக ஓடிடியில் வெளியாகும் 'விக்ரம் வேதா' இயக்குனர்களின் படைப்பு!

விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடித்த ’விக்ரம் வேதா’ படத்தை இயக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் படைப்பு அமேசான் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புஷ்கர் - காயத்ரி இயக்கிய ’விக்ரம் வேதா’ திரைப்படம் தமிழில் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் ’வதந்தி’ என்ற வெப் சீரியல் அமேசான் ஓடிடியில் டிசம்பர் 2-ம் தேதி ரிலீசாக இருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் எஸ்ஜே சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த வெப்சீரிஸ் க்ரைம் மற்றும் திரில்லர் கதையம்சம் கொண்டது என்றும் இந்த வெப்தொடரை ஆண்ட்ரூ லூயிஸ் என்பவர் இயக்கியுள்ளார் என்பதும், இவர் ஏற்கனவே ’லீலை’ ‘கொலைகாரன்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் உள்பட அனைத்து மொழிகளிலும் உருவாகியுள்ள ’வதந்தி’ வெப்சீரிஸ் குறித்த புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் எஸ்.ஏ. சூர்யா நடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘டான்’, ‘மாநாடு’ ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டாகி வரும் நிலையில் ’வதந்தி’ வெப்தொடரும் அவருக்கு மற்றுமொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிக்பாஸ் தமிழ்: கடைசியில இந்த வார எலிமினேஷன் இவர் தானா? 

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் யாராக இருக்கும் என்ற தகவல் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மீண்டும் இணையும் 'விக்ரம்' கூட்டணி: இயக்குனர், தயாரிப்பாளர் யார் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்த 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது உலகம் முழுவதும் இந்த படம் ரூ.400 கோடிக்கு

நயன்தாராவின் இரட்டை குழந்தைகளை நேரில் பார்த்து வாழ்த்திய பிரபல நடிகை: வைரல் புகைப்படம்!

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு சமீபத்தில் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைகளை நேரில் சந்தித்த பிரபல நடிகை ஒருவர் வாழ்த்துக்களை

படம் பார்த்த பிறகு டைட்டில் சரிதான்னு தோணுச்சு: 'கலகத்தலைவன்' குறித்து உதயநிதி

உதயநிதி நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கலகத்தலைவன்' திரைப்படம் வரும் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக

சிறுநீர் கேட்கும் ரக்சிதா.. செய்வதறியாது திணறும் ராபர்ட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரண்மனை டாஸ்க் நடைபெற்று வரும் போது நிலையில் இந்த டாஸ்க்கில் ராணியாக நடித்து வரும் ரக்சிதா, சிறுநீர் வேண்டும் என கேட்க, அதனால் அரசர் வேடத்தில் இருக்கும்