close
Choose your channels

விக்ரம் வேதா இந்தி ரீமேக்கின் மாஸ் அப்டேட்!

Monday, January 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ’விக்ரம் வேதா’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கிய இந்தப் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது என்பதும் கடந்த சில மாதங்களாக ஹிந்தி ரீமேக் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிருத்திக் ரோஷன் மற்றும் சயிப் அலிகான் ஆகிய இருவரும் வேதா மற்றும் விக்ரம் கேரக்டரில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் மாஸ் அப்டேட் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஹிருத்திக் ரோஷன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது ’விக்ரம் வேதா’ படத்தின் கெட்டப் சற்று முன் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வேதா என்ற கேரக்டரில் நடித்து வரும் ஹிருத்திக் ரோஷனின் கெட்டப் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஷராதா ஸ்ரீநாத் கேரக்டரில் ராதிகா ஆப்தே நடித்துவரும் இந்த படம் இந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.