ஜூலை 14-ல் குவியும் புதிய படங்கள் ரிலீஸ்

  • IndiaGlitz, [Saturday,July 08 2017]

கடந்த திங்கள் முதல் வியாழன் வரை திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தியதால் நேற்றைய வெள்ளியன்று புதிய படங்கள் வெளியாகவில்லை. கடந்த வாரம் வெளியான 'இவன் தந்திரன்' மற்றும் 'அதாகப்பட்டது மகாஜனங்களே' ஆகிய படங்கள் நேற்று ரீரிலீஸ் செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஒருவாரம் புதிய திரைப்படங்கள் வெளியாகாத காரணத்தால் வரும் வெள்ளியன்று நான்கு படங்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ஜூலை 14ஆம் தேதி கிருஷ்ணாவின் 'பண்டிகை' மற்றும் அதர்வாவின் 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' ஆகிய படங்கள் வெளியாகவுள்ள நிலையில் தற்போது அதே தேதியில் விஜய்சேதுபதி-மாதவன் நடிப்பில் உருவான 'விக்ரம் வேதா' மற்றும் அசோக்செல்வனின் 'கூட்டத்தில் ஒருவன்' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. போட்டியை தவிர்க்கும் பொருட்டு கடைசி நேரத்தில் சில படங்கள் விலகுமா? அல்லது நான்கு படங்களும் ரிலீஸ் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

சென்னையில் மோனோ ரயில் இயக்க தமிழக அரசு திட்டம்

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் இயங்கி வரும் நிலையில் மெட்ரோ ரயில் வசதியில்லாத இடங்களில் மோனோ ரயில் தடம் செயல்படும் என தமிழக அரசு இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது.

இந்திய அரசின் அனுமதியை பெற்றது சிவகார்த்திகேயன் பட நிறுவனம்

புரமோஷன் கன்சல்டண்ட் என்ற பணியில் கோலிவுட் திரையுலகில் பல படங்களில் பணியாற்றிய ஆர்.டி.ராஜா, கடந்த ஆண்டு '24ஏஎம் ஸ்டுடியோஸ்' என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் 'ரெமோ' என்ற படத்தை தயாரித்தார்.

ரஜினி பிறந்த நாளை இன்று மாலை கொண்டாடும் சிவகார்த்திகேயன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 1950ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பிறந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12ஆம் தேதி அன்று ரஜினி ரசிகர்கள் டிசம்பர் 12ஆம் தேதியை ஒரு முக்கிய தினமாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழக முதல்வருக்கு நடிகர் சங்கம் எழுதிய கடிதம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நடிகர் சங்கம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

இந்திய கிரிக்கெட்டின் போர்க்கள நாயகன் கங்குலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

"தாதா" என செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன், பெங்கால் டைகர் கங்குலி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.