இதை தெரிஞ்சு சொல்றிங்களா.. தெரியாம சொல்றிங்களா தெரியல.. 'தமிழ்நாடு' குறித்து விக்ரமன் கூறியதும் டிடி ரியாக்சன்!

  • IndiaGlitz, [Monday,January 16 2023]

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு, தமிழகம் ஆகிய வார்த்தைகள் ஊடகங்களின் தலைப்புச் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான விக்ரமன் ’தமிழ்நாடு’ என்று கூறியதை அடுத்து, ‘வெளியே நடப்பதை நீங்கள் தெரிந்து சொல்கிறீர்களா? தெரியாமல் சொல்றீங்களா? என்று தெரியவில்லை என்று டிடி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்றிருக்கும் டிடியிடம் பொங்கல் திருநாள் குறித்து விக்ரமன் கூறியபோது, ‘இன்றைய நாள் தைப்பொங்கல் நாள் மட்டுமின்றி நம்முடைய மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் வைத்த நாளாகவும் போற்றப்படுகிறது. இதற்கு முன்னர் ‘மெட்ராஸ்’ மாகாணம் என்று இருந்த நிலையில் சங்கரலிங்கனார் என்பவர் தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய உயிரை தியாகம் செய்தார். அவர் 14 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த பின்னர் தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாடு என்று பெயரை நமது மாநிலத்திற்கு கொண்டு வந்தார். இதற்காக போராடிய அனைவருக்கும் இந்த நன்னாளில் நாம் செலுத்தும் மரியாதையாக இந்த நாளை கொண்டாடுகிறோம் என்று கூறினார்.

அதற்கு டிடி, ‘தமிழ்நாடு என்பது தமிழ்நாடு தான், இதற்கு வேறு எந்த பெயரும் சரியாக இருக்காது அல்லவா’ என கேட்க, ’ஆமாம் தமிழ்நாடு தமிழ்நாடு தான் என்று விக்ரமன் கூறுகிறார். அதன் பிறகு டிடி, ‘நான் இப்படி உங்களை சொல்ல வைத்ததில் ஒரு விஷயம் இருக்கிறது, இப்போது உங்களுக்கு புரியாது, நீங்க வெளியே வந்தவுடன் புரியும் என்று கூறினார்.

அதன் பிறகு விக்ரமன் மேலும் கூறிய போது ’தமிழ்நாட்டை பிரிப்பதற்கு சிலர் முயற்சி செய்கிறார்கள், கொங்குநாடு உள்பட ஒரு சில பிரிவுகளை பிரிக்க முயற்சி செய்கிறார்கள், சில கூட்டம் அதை செய்கிறது, அப்போது நான் நீங்கள் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் இதை நாங்கள் பெரியார் நாடு என்று அழைப்போம் என்று கூறினேன்’ என்றும் விக்ரமன் கூறினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

More News

எந்த கெட்டப் போட்டாலும் கச்சிதமா இருக்கே.. விஜய்சேதுபதி அடுத்த படத்தின் செம வீடியோ!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கெட்டப் மற்றும் கேரக்டர்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பாக அவர் வில்லன் வேடத்தில் நடித்தால்

முதல்முறையாக அஜித் படம் செய்த சாதனை.. வசூலை குவிக்கும் 'துணிவு'

அஜித் நடித்த 'துணிவு'திரைப்படம் அறுவடை நாள் விருந்தாக கடந்த 11ஆம் தேதி வெளியான நிலையில் வசூலிலும் அறுவடை செய்து வரும் தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டிருக்கின்றன. 

செல்வராகவன் அடுத்த படத்தின் சென்சார் தகவல். ரிலீஸ் எப்போது?

தமிழ் திரை உலகின் திறமையான இயக்குனராக மட்டுமின்றி சில படங்களில் நடித்தும் வரும் செல்வராகவன் நடித்த அடுத்த திரைப்படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

'சூர்யா 42' படத்தின் சூப்பர் அப்டேட்.. ஃபர்ஸ்ட்லுக் எப்போது?

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 42' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

அரசியலில் குதிக்கின்றாரா 'துணிவு' மஞ்சுவாரியர்? அவரே அளித்த பதில்!

நடிகை மஞ்சு வாரியார் கேரளா அரசியலில் குதிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த தகவல்களுக்கு அவரை விளக்கம் அளித்துள்ளார்.