வெளியானது சீயான் விக்ரமின் 'சாமி 2' லோகோ

  • IndiaGlitz, [Tuesday,February 07 2017]

விக்ரம் நடித்த 'இருமுகன்' படத்தின் இசை வெளியீட்டு தினத்தில் கலந்து கொண்ட இயக்குனர் ஹரி, விக்ரம் நடிப்பில் 'சாமி 2' திரைப்படம் விரைவில் தொடங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் 'சாமி 2' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் லோகாவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

'இருமுகன்' படத்தை தயாரித்த சிபுதமீன்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றார். இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் இயக்குனர் ஹரி தீவிரமாக இருப்பதாகவும், கவுதம் மேனனின் 'துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பை விக்ரம் முடித்தவுடன் ஹரியுடன் அவர் இணைந்து 'சாமி 2' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் முதல் பாகத்தில் நடித்த த்ரிஷா மற்றும் ஒரு முன்னணி நாயகி ஆகியோர் நாயகிகளாக நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த முழுதகவல் இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அனிருத்துக்கு கிடைத்த 'ஆப்பிள்' வாய்ப்பு

உலகம் முழுவதும் இசை சேவை வழங்கி வரும் இசை நிறுவனம் 'ஆப்பிள் மியூசிக்'. இந்நிறுவனத்தின் இந்தியாவின் விளம்பர அம்பாசிடராக இளம் இசைப்புயல் அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...

சசிகலா முதல்வர் பதவியேற்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு

தமிழக முதல்வராக சசிகலா நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் முதல்வர் பதவியை ஏற்பது தார்மீக அடிப்படையில் முறையானது அல்ல என்று அரசியல் விமர்சகர்கள் உள்பட பலர் பேட்டியளித்தும், சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவு செய்தும் வருகின்றனர்...

'விஜய் 61' படத்தின் நாயகி திடீர் மாற்றம்?

இந்நிலையில் இந்த படத்தின் நாயகிகளில் ஒருவராக ஜோதிகா திடீரென மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக 'ஓகே கண்மணி' நாயகி நித்யாமேனன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது...

காற்று வெளியிடை: வைரமுத்து வார்த்தைகளால் விளையாடிய 'வான்' பாடல் வரிகள்

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் 'அழகியே' பாடல் சமீபத்தில் வெளிவந்து ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இன்னொரு பாடலான 'வான்' என்று தொடங்கும் &#

ஜெயம் ரவியின் 'போகன்' சென்னை வசூல் குறித்த தகவல்

ஒவ்வொரு வாரமும் சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் குறித்து நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த...