close
Choose your channels

அஜித் படத்துடன் மோதும் விக்ராந்த் படம்

Thursday, July 4, 2019 • தமிழ் Comments

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி விக்ராந்த் நடித்த 'பக்ரீத்' திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் முதல் ஒட்டக திரைப்படமான 'பக்ரீத்' திரைப்படம் சமீபத்தில் ரிலீசுக்கு தயாரான நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 9ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது

விக்ராந்த், வசுந்தரா காஷ்யப், வையாபுரி உள்பட பலர் நடித்த இந்த படத்தை ஜெகதீசன் சுப்பு இயக்கியுள்ளார். இமான் இசையில் விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை எம்10 புரடொக்சன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது

Get Breaking News Alerts From IndiaGlitz