இளையதளபதியின் 'விஜய் 61' படத்தில் ஷங்கர் பட வில்லன்

  • IndiaGlitz, [Saturday,March 04 2017]

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'விஜய் 61'
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படப்பிடிப்பில் விஜய், நித்யாமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. வெகுவிரைவில் இந்த படப்பிடிப்பில் விஜய் கலந்து கொள்ளவுள்ளார்
இந்நிலையில் இந்த படத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'ஐ' படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்த 'காமராஜ்' இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் மெயின் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார் என்பது ஏற்கனவே தெரிந்ததே
1980கள் மற்றும் தற்காலத்தில் என இரண்டு பருவங்கள் இணைந்த திரைக்கதையுடன் கூடிய இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். 'நான் ஈ', பாகுபலி உள்பட பல படங்களுக்கு கதை வசனம் எழுதிய எஸ்.எஸ்.ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் திரைக்கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

More News

ஜி.வி.பிரகாஷின் 'நெடுவாசல்' பாடலின் ஆரம்பம் இதுதான்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது இளைஞர்களையும், பொதுமக்களையும் எழுச்சி அடைய வைத்தவைகளில் ஒன்று ஜி.வி.பிரகாஷின் 'இது கொம்பு வச்ச சிங்கமடா' என்ற பாடல் என்றால் அது மிகையாகாது.

சுசித்ராவை பின்னால் இருந்து இயக்குவது யார்?

கடந்த ஒரு வாரமாகவே சுசித்ராவின் டுவிட்டர் மேட்டர் இணையதளங்களில் டிரெண்ட் ஆகிக்கொண்டு வருகிறது.

சுசித்ரா பிரச்சனை குறித்து செல்வராகவன் அளித்த விளக்கம்

சுசித்ராவின் ஹேக் செய்யப்பட்ட டுவிட்டர் தளம் கோலிவுட் திரையுலகில் ஒரு பிரளயத்தையே உருவாக்கிவிட்ட நிலையில் தற்போது இதில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் பிரபலங்கள் தங்கள் தரப்பில் இருந்து விளக்கம் அளித்து வருகின்றனர்.

ஏப்ரல் 3 முதல் ஹெச்1-பி விசா நிறுத்தம். அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், பதவியேற்ற நாளில் இருந்து நாளொரு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

'நாச்சியார்' படத்தில் ஜோதிகாவின் தம்பியா? ஜி.வி.பிரகாஷ் பதில்

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் பிரபல நடிகை ஜோதிகாவும், ஜி.வி.பிரகாஷூம் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர் என்பது தெரிந்ததே.