close
Choose your channels

ஓவியாவின் அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Saturday, June 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் 3' நிகழ்ச்சி நாளை முதல் தொடங்கவிருக்கும் நிலையில் பிக்பாஸ் என்றால் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது ஓவியாகத்தான் இருக்கும். இந்த நிலையில் சற்றுமுன் ஓவியாவின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியா நடித்த 'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்', '90ml', 'கணேஷா மீண்டும் சந்திப்போம்', 'காஞ்சனா 3' மற்றும் 'ஓவியாவ விட்டா யாரு சீனி' ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமான 'களவாணி 2' திரைப்படம் வரும் ஜூலை 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான 'களவாணி' படத்தின் அடுத்த பாகமான இந்த படத்தில் விமல், ஓவியா, ஆர்ஜே விக்னேஷ்காந்த், சரண்யா, இளவரசு, கஞ்சாகருப்பு, உள்பட பலர் நடித்துள்ளனர். சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படமும் முதல் பாகம் போலவே ஒரு கிராமத்து காதல் கதை என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.