close
Choose your channels

விமல்-விஜய்சேதுபதி இணையும் படத்தின் மோஷன் போஸ்டர்!

Monday, March 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விமல் நடித்த ’விலங்கு’ என்ற வெப்தொடர் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து விமல் நடிக்கும் அடுத்த படமான ’குலசாமி’ என்ற திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

விமல் நடிப்பில், விஜய் சேதுபதி வசனத்தில், குட்டிப்புலி சரவணன் சக்தி இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ’குலசாமி’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சற்று முன்னர் ’குலசாமி’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. விமல், தன்யா ஹோப் போஸ் வெங்கட், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் முன்னாள் டிஜிபி ஜாங்கிட் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் .

மகாலிங்கம் இசையில் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவில் கோபிகிருஷ்ணன் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.