விமல் நடித்த அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்!

  • IndiaGlitz, [Tuesday,July 16 2019]

நடிகர் விமல் நடித்த 'களவாணி 2' திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நிலையில் தற்போது அவருடைய அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விமலுடன் வரலட்சுமி ஜோடியாக சேர்ந்து நடித்த திரைப்படம் 'கன்னிராசி'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து சென்சாரிலும் 'யூ' சான்றிதழ் பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

ஆனால் நீண்டகாலமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்த இந்த படம் தற்போது வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இதுகுறித்த புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது

விமல், வரலட்சுமி சரத்குமார், பாண்டியராஜன், யோகி பாபு, ரோபோ சங்கர், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை முத்துகுமரன் இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையில், செல்வகுமார் ஒளிப்பதிவில் ராஜாமுகமது படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

நீ லூசா? லூசு மாதிரி நடிக்கிறியா? மீராவை வெளுத்து வாங்கிய சாக்சி!

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவராகிய மீராமிதுன் உடம்பு முழுவதும் நயவஞ்சகத்தால் உருவாக்கியது போல் நடந்து கொள்கிறார். சில நிமிடங்களுக்கு முன் பேசியதை பேசவே இல்லை

'இந்தியன் 2' படத்தில் இணையும் இரண்டு இளம் நடிகைகள்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன்-2

எல்லாரும் பின்னாடிதான் பேசுறாங்க: மோகனுடன் மோதிய சாக்சி

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒரு நட்சத்திர சிறை போன்ற இடத்தில் வெளியுலக தொடர்பே இல்லாமல் இருப்பதால் அவர்களின் பேச்சு பெரும்பாலும்

ஏ.ஆர்.ரஹ்மானை அடுத்து 'விக்ரம் 58' படத்தில் இணைந்த பிரபலம்

விக்ரம் அக்சராஹாசன் நடிப்பில் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'கடாரம் கொண்டான்' திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது

'மான்ஸ்டர்' இயக்குனரின் அடுத்த படத்தில் விஷ்ணு விஷால்?

கோலிவுட் திரையுலகில் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் தற்போது 'ஜகஜால கில்லாடி' மற்றும் 'இன்று நேற்று நாளை 2'