நடிகர் விவேக்கின் விவேகமான சமூக சேவை

  • IndiaGlitz, [Friday,August 18 2017]

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு பின்னர் நகைச்சுவையில் சமுதாயத்தில் உள்ள குறைகள் குறித்த விழிப்புணர்வை புகுத்தியதால்தான் சின்னக்கலைவாணர் என்ற பட்டம் நடிகர் விவேக் அவர்களுக்கு கிடைத்தது. தான் நடிக்கும் படத்தில் முடிந்தவரை பெரியாரின் பகுத்தறிவு கருத்துக்களை விவேக் புகுத்தி வந்தார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல்கலாம் அவர்களின் வேண்டுகோளின்படி தமிழகத்தில் ஒருகோடி மரங்களை நடும் பணியிலும் அவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தும் விழிப்புணர்வு கழிப்பிடம். இந்தியாவில் உள்ள எல்லா வீடுகளிலும் கழிப்பிடம் இருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் அரசு பலதிட்டங்களள நிறைவேற்றி வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாத நிலை கண்ட நடிகர் விவேக், அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக பெரிய பட்ஜெட் படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தாராளமாக நிதியுதவி செய்து உதவிட வேண்டும் என்று சமீபத்தில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் வேண்டுகோள் விடுத்தார். அவருடைய வேண்டுகோளுக்கு முதல் பயனாக ரூ.10 லட்சம் தரத்தயார் என தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார். தாணுவை போன்று பெரிய தயாரிப்பாளர்கள் முன்வந்து பெரிய தொகையை அளித்தால் நிச்சயம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதியை ஏற்படுத்தலாம். விவேக்கின் இந்த நல்ல முயற்சி வெற்றி பெற நமது வாழ்த்துக்கள்

More News

தென்னிந்திய திரையுலகின் முதல் முயற்சி: தளபதியின் மெர்சலுக்கு கிடைத்த பெருமை

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' குறித்த சிறப்பு அப்டேட் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகவுள்ளது என்று படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட செய்தியை சிலமணி நேரங்களுக்கு முன் பார்த்தோம்...

போயஸ் கார்டனை அடுத்து திடீரென பரபரப்பான கொடநாடு எஸ்டேட்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லமான 'வேதா இல்லம்' நினைவிடமாக மாற்றப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக அறிவித்தார்.

பிக்பாஸ்: ஆட்டோவில் வந்து இறங்கும் நடிகை யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியாவை வெளியேற்றியவுடன் அவரது வெற்றிடத்தை நிரப்ப சேனல் நிர்வாகமும் அவ்வப்போது ஆட்களை உள்ளே அனுப்பிக்கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம்தான் கொஞ்சம் கூட மெருகேறவே இல்லை...

16 வயது சிறுமியை திருமணம் செய்த 65 வயது முதியவர்!

அரபு நாடுகளை சேர்ந்த முதியவர்கள் இந்திய சிறுமிகளை திருமணம் செய்து தங்கள் நாட்டிற்கு அழைத்து செல்வதாக அவ்வப்போது புகார்கள் வந்துள்ள நிலையில் தற்போது ஓமன் நாட்டை சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் 16 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு தனது நாட்டிற்கு அழைத்து சென்றுள்ளதாக திடுக்கிடும் புகார் ஒன்று வந்துள்ளது...

நகைச்சுவை நடிகராக மாறி வருகிறார் கமல்ஹாசன். அமைச்சர் கடம்பூர் ராஜூ

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே தனது டுவிட்டர் மூலம் தமிழக அரசுக்கு எதிராக அதிரடி குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்...