தனுஷின் 'விஐபி 2' பாடல்கள் மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,June 21 2017]

தனுஷ் நடித்த 'விஐபி' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. 'விஐபி 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் ஜூலையில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களில் டிரெண்ட் ஆன நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதியை இயக்குனர் செளந்தர்யா ரஜினிகாந்த் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தின் பாடல்கள் வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும், தமிழ், தெலுங்கு மொழி பதிப்புகளின் டிரைலரும் அதே தினத்தில் வெளியாகும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இந்தி டிரைலர் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். சமீர் தாஹிர் ஒளிப்பதிவாளராகவும், சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு மற்றும் தனுஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.

More News

ரஜினி, அஜித், விஜய், தனுஷ் குறித்து 'வனமகன்' நாயகி

ஜெயம் ரவி, சாயிஷா நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வனமகன்' திரைப்படம் வரும் வெள்ளியன்று பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் நாயகி சாயிஷாசேகல் நேற்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்தார்...

ரஜினிக்கு சுப.உதயகுமாரன் கேட்ட 4 கேள்விகள்: இது அரசியலா? இல்லை பள்ளிக்கூடமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்னும் அரசியல் கட்சியே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத வெற்றிடத்தில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துவிடலாம் என்று பகல் கனவு கண்ட லட்டர்பேட் கட்சிகள் பதறுகின்றன.

பாகிஸ்தான் மக்களின் மனங்களையும் வென்ற தோனி & கோ

கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

கெத்து : ஆம்புலன்ஸ்க்காக ஜனாதிபதி காரை தடுத்து நிறுத்திய காவலர்

முதலமைச்சர் அல்லது அமைச்சர் வருகிறார் என்றால் சுமார் அரைமணி நேரம் வரை போக்குவரத்தை ஸ்தம்பிக்கும் அளவுக்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதைத்தான் நாம் இதுவரை பலமுறை பார்த்துள்ளோம்.

செல்பி பிரியர்களுக்கு ஆப்பு வைத்த உபி காவல்துறை

கடந்த சில வருடங்களாக இளைஞர்கள் மத்தியில் செல்பி எடுக்கும் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.