தனுஷின் 'விஐபி 2' படத்தின் ரிலீசில் திடீர் மாற்றம்

  • IndiaGlitz, [Tuesday,August 08 2017]

தனுஷ், அமலாபால், கஜோல் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் இரண்டாம் பாகமான 'விஐபி 2' திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கான முன்பதிவுகள் ஒருசில திரையரங்குகளில் நேற்று மாலை முதல் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக முன்பதிவுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் இந்த படம் ஒரே நாளில் அதாவது ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அதில் ஒரு சிறிய மாற்றமாக தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக தெரிகிறது. ஆனால் தமிழ் 'விஐபி 2' ரிலீஸில் எந்த மாற்றமும் இல்லை. மூன்று மொழிகளிலும் இந்த படம் 'யூ' சான்றிதழ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு மற்றும் தனுஷ் இணைந்து தயாரித்துள்ளனர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்தில் சமீர் தாஹிர் ஒளிப்பதிவாளராகவும், சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.

More News

ரஜினியை தவறாக பேசினாரா பார்த்திபன்? இதோ ஒரு விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து பல அரசியல்வாதிகளும் ஒருசில திரையுலகினர்களும் கிண்டலடித்து வருகின்றனர்...

மண்ணின் மைந்தர் சண்முகப்பாண்டியனின் 'மதுரவீரன்'

கோலிவுட் திரையுலகில் பல அதிரடி ஆக்சன் வெற்றி படங்களை கொடுத்தவர் கேப்டன் விஜயகாந்த். போலீஸ் உடைக்கு பொருத்தமானவர், அவரது படங்களில் சண்டைக்காட்சிகளில் அனல் தெறிக்கும்.

படப்பிடிப்பில் விஷால் படுகாயம்: டாக்டர்கள் விரைந்தனர்

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் 'துப்பறிவாளன்' படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

யார் இந்த ஆரவ்? சில தெரியாத, புரியாத தகவல்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக கலகலப்பும் கைகலப்புமாக இருந்தது. குறிப்பாக ஓவியா-ஆரவ் ரொமான்ஸ் காட்சிகள் அனைவரையும் கவர்ந்தது. ஆனால் திடீரென ஆரவ் காதல் இல்லை, தான் கொடுத்த முத்தம் கூட மருத்துவ முத்தம் என்று கூறியது அனைவரையும் அதிர்ச்ச்குள்ளாக்கியது...

ரைசா தலைவரா? ஜீரணிக்க முடியாத சக்தி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டாரும், சூப்பர் வில்லியும் வெளியேறிவிட்ட நிலையில் இந்நிகழ்ச்சி குறித்த ஆர்வம் சற்று குறைந்துள்ளது...