இவரெல்லாம் கிரிக்கெட்டுல ஜொலிப்பாருனு நா கொஞ்சம்கூட நினைக்கல... இந்திய ஜாம்பவான் பற்றி வைரலாகும் புதுத்தகவல்!!!

 

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாக்கார் யூனிஸ் இந்திய கிரிக்கெட் ஜாம்வனாகக் கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் பற்றி ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்து கொண்டு இருக்கிறார். இப்போதைய நிலைமையை பொறுத்த அளவில் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் யாருமே தொடமுடியாத உச்சத்தை எட்டியிருக்கிறார். அருவடைய ஆரம்பக் கட்ட ஆட்டத்தைப் பார்க்கும் போது பின்னால் இவ்வளவு பெரிய புகழை சம்பாதிப்பார் என நான் கொஞ்சம் கூட நம்பவில்லை என்று தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டு இருக்கிறார் யூனிஸ்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் கிரேட் வீரராகக் கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 16 ஆவது வயதில் 1989 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கலந்து கொண்டார். அவர் கலந்து கொண்ட முதல் இன்னிஸ்ங்கில் 15 ரன்களை எடுத்த நிலையில் வாக்கார் யூனிஸ் பந்தில் கிளீன் போல்ட் ஆனார். பாகிஸ்தானுக்கு எதிராக கலந்து கொண்ட அடுத்த போட்டியிலும் அவர் டக்-அவுட் ஆனார். இந்த இரு அனுபவங்களை பார்க்கும்போது சச்சின் தன்னை பெரிதாக ஈர்க்கவில்லை என்று தன்னுடைய பழைய அனுபவங்களை தற்போது யூனிஸ் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.

24 வருடங்களாக இந்திய கிரிக்கெட் அணி சார்பாக விளையாடியவர் சச்சின். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை செய்திருக்கிறார். மேலும் அதிக சதம், அதிக போட்டிகளில் கலந்து கொண்ட வீரராகவும் இவர் இருக்கிறார். அவருடைய அறிமுக ஆட்டத்தில் நடந்த நிகழ்வுகள் யூனிஸ் வாயிலாக தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. “சச்சினை நான் முதல் முறையாக பார்க்கும்போது தற்போது கிரேட் சச்சினாக விளங்கும் அவர் அப்போது என்னை ஈர்க்கும் அளவிற்கு இல்லை. விளையாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் பல வருடங்களாக அவர் செய்தவை அற்புதமானது. கிரிக்கெட்டில் இவ்வளவு பெயரை பதிப்பார் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் கடின உழைப்பு அவருக்கு இந்த பெயரை வாங்கி கொடுத்துள்ளது” எனக் குறிப்பிட்டு இருக்கிறார் யூனிஸ்.

More News

இரக்கமற்ற இயக்குனர்கள்: சுஷாந்த் தற்கொலைக்கு பின்னும் திருந்தவில்லை: தமிழ் நடிகை ஆவேசம்

சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பின்னரும் இயக்குனர்கள் இன்னும் திருந்தவில்லை என்றும் பல இயக்குனர்கள் இரக்கம் அற்றவர்களாக இருக்கிறார்கள் என்றும் ஒரு சில முதிர்ச்சி அடைந்த இயக்குனர்கள் மட்டுமே

கணவர் மற்றும் செல்ல மகனுடன் செல்பி: வைரலாகும் விஜய் நாயகியின் புகைப்படங்கள்

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய முதல் திரைப்படமான 'மின்னலே' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரீமாசென். அதன்பின் தளபதி விஜய்யுடன் 'பகவதி',

தயாரிப்பாளரை ஹீரோவாக்கிய மிஷ்கின் சகோதரர்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கினின் சகோதரர் ஆதித்யா கடந்த 2018 ஆம் ஆண்டு 'சவரக்கத்தி' என்ற திரைப்படத்தை இயக்கினார்.

10 கிலோ குறைந்த எடை: ஸ்லிம்மாக மாறியதன் ரகசியத்தை சொல்லும் ஷெரின்

தனுஷ் அறிமுகமான 'துள்ளுவதோ இளமை' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷெரின். அதன்பின்னர் 'விசில்' உள்பட பல திரைப்படங்களில் நடித்த ஷெரின்

வந்துவிட்டது... 2020 இன் அடுத்த வைரஸ் பெருந்தொற்று!!! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!!

கொரோனா, ஸ்வைன் ஃப்ளூவை தொடர்ந்து 24 மணி நேரத்தில் மனிதர்களைக் கொல்லக்கூடிய மற்றொரு நோய்த்தொற்று சீனாவில் பரவி வருவதாகத் தற்போது பரபரப்பு செய்தி வெளியாகி இருக்கிறது.