விராட் கோலி மற்றும் சிலம்பரசன் டி.ஆர் (STR) இணைகிறார்களா? ரசிகர்கள் ஆர்வம் !


Send us your feedback to audioarticles@vaarta.com


சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மானான விராட் கோலி, STR நடித்த பத்து தல படத்தில் இருந்து “நீ சிங்கம் தான்” என்ற பாடலை தான் மீண்டும் மீண்டும் கேட்பதாக கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இப்போது இந்தப் பாடல், பல கிரிக்கெட் அடிப்படையிலான ரீல்ஸ்கள் மற்றும் சமூக வலைதள வீடியோக்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
STR, விராட் கோலியின் வீடியோவைக் ஒரு கவனித்து, “நீயே ஒரு சிங்கம்” தான் எனக்கூறும் விதமாக “நீ சிங்கம் தான்” எனக் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார். இருவரின் ரசிகர்களும், தங்களுக்கு பிடித்த திரைத்துறையிலும் விளையாட்டுத் துறையிலும் உள்ள இரு ஆளுமைகள், இப்படி ஒற்றுமையுடன் இணைந்து இருப்பதை கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் இந்தக் கதை இங்கு முடியவில்லை. STR மற்றும் விராட் கோலி இருவரும் தங்களது தனித்துவ beard (தாடி) ஸ்டைல்களுக்குப் பிரபலமானவர்கள். STR தற்போது கச்சிதமான உடற்கட்டுடன் உள்ள நிலையில், பல வகைகளில் அவர் விராட் கோலியைப் போலவே தோற்றமளிக்கிறார். STR, விராட் கோலியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பயோபிக்கில் நடிக்கப் போகிறாரா? என்பது தான் மும்பை திரையுலகத்தில் தற்போதைய பேச்சாக உள்ளது.
இணையதளங்களில் VK (விராட் கோலி) மற்றும் STR இடையே ஏற்பட்டுள்ள நட்புறவைப் பார்த்தால், STR இந்தக் கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வாக இருக்கக்கூடும். விராட் மற்றும் அனுஷ்கா விருப்பம் தெரிவித்தால் இது அடுத்த கட்டத்திற்கு நகரும்.
இந்த இருவரில் ஒருவர் IPL பட்டியலில் உச்சத்தில் இருக்கிறார், மற்றவர் Thug Life, STR49, STR50, STR51 போன்ற படங்களுடன் திரைத்துறையில் சாதனைகள் படைத்து வருகிறார். இந்த நிலையில், STR உடன் விராட் கோலியின் பயோபிக் இணைந்தால், அது உண்மையிலேயே ஒரு பான்-இந்திய விருந்தாக இருக்கும்.
விராட்-STR கூட்டணியை பார்க்க ரசிகர்கள் பெரும் ஆவலோடு உள்ளனர். இது நடக்குமா? என்பது விரைவில் தெரியவரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments