முதல் இந்தியர் இவர்தான்… மிரள வைக்கும் விராட் கோலியின் சோஷியல் மீடியா சாதனை!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாகவும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்து தற்போது முக்கிய வீரராக விளையாடி வரும் விராட் கோலி கிரிக்கெட்டைத் தவிர சமூகவலை தளங்களிலும் பிரபலமாக அறியபடுகிறார். அவருடைய ஒரு சாதனைதான் தற்போது அனைவராலும் பாராட்டப்படுகிறது.

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களுள் ஒருவரான விராட் கோலி கிரிக்கெட்டைத் தவிர விளம்பரப் படங்கள் மற்றும் சமூகவலைத் தளங்களிலும் பிரபலமாக இருந்துவருகிறார். அந்த வகையில் தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கை 250 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இதனால் இன்ஸ்டாகிராமில் அதிகளவில் ஃபாலோயர்களைக் கொண்ட முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

மேலும் உலக அளவில் அதிகமான ரசிகர்கள் பின்தொடரும் நான்காவது விளையாட்டு வீரர் என்ற பெருமையும் விராட் கோலிக்கு கிடைத்திருக்கிறது. இதையடுத்து கோலியின் ரசிகர்கள் அவருக்குப் பராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஐபிஎல் 16 ஆவது சீசனில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிய விராட் கோலி இறுதி ஆட்டத்தில் சதம் அடித்து மீண்டும் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் அவரைக் கொண்டாடினர். ஆனால் ஆர்சிபி அணி ஃப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. இதையடுத்து இலக்கை அடையமுடியாததற்கு விராட் கோலி தனது சோஷியல் மீடியாவில் வருத்தம் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

16 ஆவது சீசனில் விளையாடிய கோலி 14 போட்டிகளில் விளையாடி 639 ரன்களையும் 53.25 சராசரியையும் பெற்றுள்ளார். அதேபோல இந்த சீசனில் 2 சதத்தையும் 6 அரைச் சதங்களையும் அவர் அடித்திருந்தார். இந்நிலையில் அதிக அளவில் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களைக் கொண்ட முதல் இந்தியர் என்ற பெருமையையையும் உலகில் அதிக ரசிகர்கள் பின்தொடரும் 4 ஆவது விளையாட்டு வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பிரபலங்கள்

போர்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்ஸ்டாகிராமில் 585 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்று இதில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மற்றும் பிஎஸ்ஜி சூப்பர் ஸ்டாராக இருந்துவரும் லியோனல் மெஸ்ஸி இன்ஸ்டாகிராமில் 464 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

மல்யுத்த வீரராக இருந்து தற்போது ஹாலிவுட் நடிகராக மாறிய டுவைன் தி ராக் ஜான்சன் இன்ஸ்டாகிராமில் 380 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் 250 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் இன்ஸ்டாகிராமில் 200 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களைப் பெற்று ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

கூடைபந்து விளையாட்டு வீரர் லெப்ரான் ஜேம்ஸ் இன்ஸ்டாகிராமில் 153 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களைப் பெற்று ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் கைலியன் எம்பாப்பே இன்ஸ்டாகிராமில் 100 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களைப் பெற்று ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

கோமாளிகள், சோம்பேறிகள், முட்டாள்கள்: கோவிலுக்கு சென்ற இளம் பெண்களை திட்டிய கங்கனா..!

அரைகுறை ஆடையுடன் கோவிலுக்கு சென்ற இளம் பெண்களின் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த நடிகை கங்கனா ரனாவத், 'சோம்பேறிகள், முட்டாள்கள் என திட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐபிஎல் நிறைவு விழாவில் பாட்டு பாடும் 'அரபிக்குத்து' பாடகி..! அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஐபிஎல் இறுதிப் போட்டி வரும் ஞாயிறு அன்று நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியின் நிறைவு விழாவில் 'அரபிக்குத்து' உட்பட பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய பாடகி பாட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக

'ஹேப்பி பர்த்டே பார்ட்னர்.. லவ் யூ பார்ட்னர்.. விஜய் டிவி ஜாக்குலின் வெளியிட்ட வீடியோ வைரல்..!

விஜய் டிவி ஜாக்குலின் தனது நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது.

மனைவி பிரியாவுடன் கேன்ஸ் விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் அட்லி… அட்டகாசமான புகைப்படம்!

உலக அளவில் வரவேற்பு பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

மாலத்தீவு கடலில் மீன் போல் நீந்தும் கனிகா.. உடன் இருப்பவர் யார் தெரியுமா?

அஜித் நடித்த 'வரலாறு' உள்பட சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்த நடிகை கனிகா, சமீபத்தில் மாலத்தீவு சென்ற நிலையில் அங்கிருந்து அவர் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள்,