விமர்சனத்திற்கு இடையே டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி செய்த அசத்தல் சாதனை!

கேப்டன்சியில் சொதப்புகிறார், இந்திய அணிக்கு ஐசிசி கோப்பையைப் பெற்றுத்தரவில்லை என்று விராட் கோலி மீது விமர்சனம் வைக்கப்பட்ட அதேவேளையில் ஐபிஎல் போட்டிகளிலும் பெங்களூரு அணிக்கு ஒருமுறைகூட வெற்றிக்கோப்பையைப் பெற்றுத்தரவில்லை என்று கடும் விமர்சனம் வைக்கப்பட்டது. இதனால் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகு டி20 இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார்.

இதையடுத்து பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகிக்கொள்வதாக விராட் கோலி தெரிவித்து உள்ளார். இப்படி கோலி மீது விமர்சனமும் அதைத்தொடர்ந்து பதவி விலகல்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே டி20 கிரிக்கெட் போட்டியில் சர்வதேச அளவில் முதல் 10 ஆயிரம் ரன்களை குவித்த சாதனை வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ஐபிஎல் 14 ஆவது சீசன் போட்டியின் 39 ஆவது லீக் ஆட்டத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்ளூரு அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில் பெங்களூரு அணியினர் முதல் முறையாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை குவித்து இருந்தனர். 166 ரன்கள் என்ற இலக்குடன் ஆடத் துவங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியினர் படு சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18.11 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்களை மட்டுமே எடுத்திருந்ததால் 54 ரன்கள் வித்தியாசத்தில் விராட் கோலியின் பெங்களூரு அணி வெற்றிப்பெற்றது.

இந்தப் போட்டியில் கோலி 41 பந்துகளுக்கு 51 ரன்களை எடுத்திருந்தார். இதில் 13 ஆவது ரன்னை அடிக்கும்போது டி20 கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களைத் தாண்டிய முதல் சர்வதேச இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். சர்வதேச அளவில் 5 வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி இதுவரை 314 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 5 சதம், 74 அரை சதம், 10,038 ரன்கள் எடுத்துள்ளார். இவரைத் தவிர டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில் 14,275 ரன்களையும் பொல்லார்ட் 11,195 ரன்களையும் பாகிஸ்தான் அணியின் சோயிப் மாலிக் 10,808 ரன்களையும் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 10,019 ரன்களையும் குவித்துள்ளனர்.

நேற்றையை போட்டி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு சாதகமான நிலையில் அவர்கள் 12 புள்ளிகளுடன் ஐபிஎல் போட்டிகளில் 3 ஆவது இடத்தில் தொடர்ந்து நீடிக்கின்றனர். மேலும் இதுவரை ஆடிய 10 போட்டிகளில் 6 முறை வெற்றிப்பெற்றுள்ளனர். இதற்கு மாறாக மும்பை இந்தியன்ஸ் அணி 10 போட்டிகளில் 6 முறை தோல்வியை சந்தித்து 8 புள்ளிகளுடன் 7 ஆவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. இதனால் ப்ளே ஆஃப் க்கு தகுதிப்பெறுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

More News

பிரபல காமெடி நடிகருக்காக தமிழக அரசிடம் கோரிக்கை வைத்த கமல்ஹாசன்!

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக இருந்த நாகேஷ் அவர்களுக்கு உரிய கவுரவத்தை தமிழக அரசு அளிக்க வேண்டும் என உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் நாகேஷின் பிறந்த நாளான

நல்ல தொடக்கம், ‌வாழ்த்துகள் உறவுகளே: அஜித் ரசிகர்களுக்கு சுரேஷ் காமாட்சி வாழ்த்து!

அஜித் ரசிகர்களின் செயலை பாராட்டி 'நல்ல தொடக்கம் ‌வாழ்த்துகள் உறவுகளே' என 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் அஜித் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் 

மாதவன் நடித்த 'ராக்கெட்டரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான மாதவன் நடித்து, தயாரித்து, இயக்கிய 'ராக்கெட்டரி' என்ற திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி

மகள்கள் தினத்தில் மகளுக்கு பெயர் வைத்த ஆர்யா!

பிரபல தமிழ் நடிகர் ஆர்யாவுக்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு நேற்று மகள்கள் தினத்தில் பெயர் வைத்துள்ளார் 

பிக்பாஸ் தமிழ்: குவாரண்டனில் இருக்கும் போட்டியாளர்களின் புகைப்படம் வைரல்!

பிக் பாஸ் தமிழ் ஐந்தாவது சீசன் வரும் அக்டோபர் 3ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் கசிந்து வருவதை ஏற்கனவே