தெரியாமல் செய்துவிட்டேன்.. நடிகை விவகாரத்திற்கு விராட் கோஹ்லி விளக்கம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சமூக வலைதளத்தில் வெளியான பிரபல கவர்ச்சி நடிகை அவநீத் கவுர் கிளாமர் புகைப்படத்திற்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி லைக் போட்டது, சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோஹ்லி இதுவரை பத்து போட்டிகளில் ஆறு அரை சதங்கள் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், நடிகை அவநீத் கவுர் கவர்ச்சி புகைப்படத்திற்கு விராட் கோலி லைக் போட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. “கவர்ச்சி புகைப்படத்திற்கு ஒரு கிரிக்கெட் வீரர் லைக் போடுவதா?” என பலர் விமர்சனங்களை வெளியிட்டனர்.
இது தொடர்பாக விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
“நான் என் சமூக வலைதள பதிவுகளை அழித்த போது தவறாக லைக் விழுந்து விட்டது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதற்குப் பின்னணியில் எந்த நோக்கமும் இல்லை. தேவையற்ற யூகங்களை செய்ய வேண்டாம். உங்கள் புரிதலுக்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒருபுறம், பலர் விராட் கோலியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தாலும், மற்றொரு புறம் “ஒரு புகைப்படத்திற்கு லைக் போடுவது அவ்வளவு பெரிய தவறா?” எனக் கேட்டு, அவருக்கு ஆதரவாக கருத்து வெளியிடுபவர்களும் இருந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments