close
Choose your channels

லிப் டு லிப் புகைப்படத்தை ஏன் நீக்க வேண்டும்: கோஹ்லிக்கு ரசிகர்கள் கேள்வி

Wednesday, February 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லிக்கும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இத்தாலியில் திருமணம் நடந்தது. இந்த நிலையில் விராத் கோஹ்லி தனது டுவிட்டரில் அனுஷ்காவுக்கு லிப் டு லிப் முத்தம் கொடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இதற்கு 'மை ஒன்லி' என்ற டைட்டிலையும் விராத் கொடுத்திருந்தார். இந்த புகைப்படம் ஒருசில மணி நேரங்களில் வைரலாகிய நிலையில் என்ன நினைத்தாரோ, திடீரென அந்த புகைப்படத்தை நீக்கிவிட்டார்.

இதுகுறித்து கருத்து கூறிய விராத் கோஹ்லியின் ரசிகர்கள், 'விராத் கோஹ்லியின் இந்த புகைப்படத்தை பாதுகாத்து வைக்கும் அதிர்ஷ்டசாலியாக கருதுகிறோம். இந்த புகைப்படத்தில் ஒரு தவறும் இல்லையே! பின் ஏன் நீக்க வேண்டும். நீங்கள் இருவரும் திருமணமான ஒரு பொருத்தமான ஜோடி. என்று கூறியுள்ளனர்

கிரிக்கெட் ரசிகர்களிடம் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ள இந்த புகைப்படத்தை விராத்கோஹ்லி தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டாலும், இந்த புகைப்படம் மிக வேகமாக வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.