சர்ச்சையில் சிக்கிய பிசிசிஐ… பிரஸ்மீட் வைத்து விளக்கிய விராட் கோலி!

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடரை ஒட்டி இந்தியக் கிரிக்கெட் அணிக்குள் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அதிலும் குறிப்பாக விராட் கோலி டி20 கேப்டன்ஷியை துறந்தவுடன் அந்த பதவி ரோகித் சர்மாவிற்கு வழங்கப்பட்டது. இதையடுத்து ஒருநாள் போட்டியின் கேப்டன்ஷி பதவியும் கோலியிடம் இருந்து பறிக்கப்பட்டு ரோகித் சர்மாவிடம் வழங்கப்பட்டது.

இதையடுத்து தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கைவலி காரணமாக ரோகித் சர்மா விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியது. அதேபோல ஒருநாள் போட்டியில் கோலி விளையாடமாட்டார், அவர் பிசிசிஐயிடம் விடுமுறை கேட்டுள்ளார் என்பது போன்ற தகவல்கள் வெளியாகியது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியை வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் விராட் கோலி செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பல முக்கிய விஷயங்களை தெளிவுப்படுத்தியுள்ளார்.

1.தென்ஆப்பிரிக்கவிற்கு எதிராக நடைபெறும் ஒருநாள் போட்டியிலும் நான் கண்டிப்பாக விளையாடுவேன். நான் பிசிசிஐயிடம் விடுமுறை குறித்து பேசவே இல்லை. நான் கேப்டன்ஷி பதவியில் இருந்து விலக்கப்பட்டாலும் தொடர்ந்து விளையாடுவேன். இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்பும் நபர்களிடம்தான் இதுகுறித்து விளக்கம் கேட்க வேண்டும் என்று கோலி தெரிவித்து உள்ளார்.

2.முன்னதாக திடீரென்று ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன்ஷி பதவியை பிசிசிஐ ரோகித் சர்மாவிற்கு அளித்தது. இதுகுறித்து விளக்கம் அளித்த கங்குலி டி20 இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன்சி பதவியை ராஜினாமா செய்தபோதே வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். ஆனால் விராட் கோலி கேட்கவில்லை. இதனால் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு ஒரே கேப்டனை நியமிக்க வேண்டிய தேவையிருந்ததால் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலக்கப்பட்டு இருக்கிறார் என விளக்கம் அளித்திருந்தார்.

இதுகுறித்து நேற்று பேசிய விராட் கோலி, நான் டி20 இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன்சி பதவியை ராஜினாமா செய்தபோது அதுகுறித்து பிசிசிஐ எந்த விளக்கமும் என்னிடம் கேட்கவில்லை. உடனே எனது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்கள். எனவே இந்தக் கூற்றில் உண்மையில்லை என்று கூறியுள்ளார்.

3. ஒருநாள் போட்டியின் கேப்டன்சி பதவி ரோகித் சர்மாவிற்கு வழங்குவதற்கு முன்பே விராட் கோலியிடம் விவாதிக்கப்பட்டதாகவும் தானாகவே ராஜினாமா செய்வதற்காக பிசிசிஐ காலஅவகாசம் கொடுத்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை. கேப்டன்சி அறிவிப்புக்கு ஒன்றரை மணிநேரம் முன்பாக ஒருநாள் கேப்டன்ஷி மாற்றம் பற்றி எனக்குத் தெரிவிக்கப்பட்டது என்று கோலி தற்போது தெரிவித்து உள்ளார்.

4. ரோஹித் சர்மா ஒருநாள் கேப்டனாக இருப்பதால் நான் ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டேன் என்பது போன்ற தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. இப்போது மட்டுமல்ல, கடந்த சில ஆண்டுகளாகவே ரோகித் சர்மாவிற்கும் எனக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதிலும் எந்த உண்மையும் இல்லை. நான் உறுதியாக ஒருநாள் போட்டியில் விளையாடுவேன் என்று விராட் கோலி தெரிவித்து உள்ளார்.

5. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 32 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்றது. தற்போது தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்திய அணியின் புள்ளிகளும் படுமோசமாக இருந்து வருகிறது. இதற்கு முன்பு தென்ஆப்பிரிக்காவுடன் 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி வெறுமனே 3 போட்டிகளில் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது. 7 போட்டிகளில் டிரா செய்துள்ளது.

எனவே தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக விளையாடுவது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. ஆஸ்திரேலியாவைப் போன்றே தற்போது கோப்பையை வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். இந்திய அணி இதற்காக கடுமையாக முயற்சிக்கும் எனத் தெரிவித்து உள்ளார்.

விராட் கோலியின் இந்தக் கருத்துகளை தொடர்ந்து பிசிசிஐ தலைவர் கங்குலி ஏன் விராட் கோலி விஷயத்தில் மாற்றிப் பேசியுள்ளார். பிசிசிஐக்கு விராட் கோலி மீது நம்பிக்கையற்ற தன்மை ஏற்பட்டு விட்டதா? அதனால் இதுபோன்ற விஷயங்களை செய்தார்களா? என்று பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

More News

விண்வெளியில் உடலுறவு சாத்தியமா? வைரலாகும் சர்ச்சை சந்தேகம்!

விண்வெளியில் மனிதர்கள் உடலுறவு வைத்துக் கொள்ள முடியுமா?

விஷாலின் பிரமாண்டமான பான்-இந்தியா படம்: இயக்குனர் யார் தெரியுமா?

விஷால் நடித்து வரும் 'வீரமே வாகை சூடும்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதும் தெரிந்ததே.

'புஷ்பா' தமிழில் நாளை ரிலீஸ் ஆகின்றதா? படக்குழுவினர் வெளியிட்ட தகவல்!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படம் நாளை தமிழில் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

கத்ரீனா - விக்கி திருமணத்திற்கு வந்த பரிசுப்பொருட்களின் மதிப்பு இத்தனை கோடியா?

பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனா கைப் மற்றும் விக்கி கௌஷல் ஆகிய இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது என்பதும் பிரம்மாண்டமான முறையில் நடந்த இந்த திருமணத்தில்

அதேபோன்ற நிலைமை இப்போது ஏற்பட்டுவிடக்கூடாது: கமலுக்கு கோரிக்கை வைத்த ஜெயகாந்தன் மகள்!

'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற டைட்டிலுக்கு எழுத்தாளர் ஜெயகாந்தனின் வாரிசுகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு கமல்ஹாசனிடம் இது குறித்து கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது