100 மில்லியன் பாலோயர்களை பெற்ற முதல் கிரிக்கெட் வீரர்… இந்திய கேப்டனின் புது சாதனை?
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களை பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைத் தட்டிச் சென்று இருக்கிறார் இந்தியக் கேப்டன் விராட் கோலி. சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் விராட் கோலியை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனைக் கடந்து உள்ளது.
அதேபோல இந்தியாவில் 100 மில்லியன் பாலோயர்களை கொண்ட ஒரே பிரபலம் என்ற பெருமைக்கும் உரியவராக விராட் கோலி மாறி இருக்கிறார். மேலும் உலக அளவில் அதிக பாலோயர்களைக் கொண்ட ஒரே கிரிக்கெட் பிரபலம் என்ற பெருமையும் இவருக்குத்தான் சேர்ந்து இருக்கிறது.
விராட் கோலியை அடுத்து இந்தியாவில் அதிக பாலோயர்களை கொண்ட பிரபலமாக நடிகை பிரியங்கா சோப்ரா இருந்து வருகிறார். அவருக்கு அடுத்த இடத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோன் ஆகியோர் உள்ளனர். இந்திய பிரதமர் மோடியை இன்ஸ்டாவில் தொடருவோரின் எண்ணிக்கை 51.2 மில்லியனாக இருந்து வருகிறது.
மேலும் உலக அளவில் இன்ஸ்டாவில் அதிக பாலோயர்களை கொண்ட பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரோனால்டோ. இவரை 500 மில்லியன் பேர் பாலோ செய்து வருகின்றனர். அடுத்த இடத்தில் லியோனல் மெஸ்ஸி, நெய்மர் ஆகியோர் உள்ளனர். இந்த வரிசையில் தற்போது 4 ஆவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார் நம்முடைய இந்தியக் கேப்டன் விராட் கோலி. இதனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.