நீங்கள்தான் எங்கள் நிரந்தர கேப்டன்: தோனிக்கு விராத் புகழாரம்

  • IndiaGlitz, [Friday,September 01 2017]

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடந்த 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி இந்திய அணியின் அபார வெற்றி மட்டுமின்றி மேலும் ஒரு சிறப்பை பெற்றுள்ளது. அது இந்த போட்டி தல தோனிக்கு 300வது போட்டி என்பது ஆகும்.

முன்னதாக போட்டி நடைபெறுவதற்கு முன்னர் 300வது போட்டியை விளையாடும் தல தோனிக்கு பிளாட்டினம் பேட் ஒன்றை பிசிசிஐ நினைவு பரிசாக வழங்கியது. அப்போது பேசிய கேப்டன் விராத் கோஹ்லி, 'இந்திய அணியில் இப்போது இருக்கிற 90 சதவிகிதம் பேர், உங்கள் தலைமையின் கீழ்தான் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியிருக்கிறோம். அதனால் எங்களுக்கு எப்போதும் நீங்கள்தான் கேப்டன். இந்த நினைவு பரிசை உங்களுக்கு வழங்குவதில் பெருமையடைகிறோம்' என்று கூறினார்.

மேலும் இந்த போட்டியில் தோனி அவுட் ஆகாமல் 49 ரன்கள் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை அவுட் ஆகாமல் கடைசி வரை களத்தில் நின்ற பேட்ஸ்மேன் என்ற புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். தோனி இதுவரை 73 போட்டிகளில் அவுட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவரை அடுத்து இலங்கையின் சமிந்தா வாஸ், தென்னாப்பிரிக்காவின் போலக் ஆகியோர் 72 முறை அவுட் ஆகாமல் இருந்துள்ளனர்.

மேலும் தல தோனி தனது 100வது, 200வது, 300வது ஆகிய போட்டிகளில் இலங்கைக்கு எதிராக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினியின் 'காலா' படப்பிடிப்பு இன்று முதல் திடீர் ரத்து

ஃபெப்சி தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதால் ரஜினியின் 'காலா' உள்ளிட்ட சுமார் 40 திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது....

விமலுக்கு திருப்புமுனை ஏற்படுத்துவரா ஓவியா?

நடிகர் விமல் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் திரையுலகினர் அவருக்கு வாழ்த்து கூறினர்...

புளூவேல் அட்மின் கைது! முடங்குமா ஆபத்தான விளையாட்டு?

உலகையே ஆட்டிப்படைத்து வந்த ஆன்லைன் விளையாட்டான புளுவேல் விளையாட்டின் அட்மின் ரஷ்ய போலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

முதல்வரை சந்திக்கின்றார் கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே அதிரடி அரசியல் கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

ஓட்டுனர் உரிமம் காணாமல் போய்விட்டால் விண்ணப்பிக்க எளிய வழி

நாளை முதல் ஓட்டுனர் உரிமம் ஒரிஜினலை கையில் வைத்து கொண்டுதான் வாகனங்களை ஓட்ட முடியும்.