close
Choose your channels

ஷங்கர் மகள் அதிதி ஷங்கரின் அட்டகாசமான ராம்ப்வாக்: வைரல் வீடியோ

Monday, September 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் சமீபத்தில் நடிகையாக அறிமுகம் செய்யப்பட்டார். சூர்யா - ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாகும் ’விருமன்’ என்ற திரைப்படத்தில் அவர் நாயகியாக அறிமுகமாகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்களை நேரில் சந்தித்து அதிதிஷங்கர் ஆசி பெற்றார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நடிகை அதிதி ஷங்கர் அட்டகாசமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

சமீபத்தில் நடந்த ராம்சரண் தேஜா நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் திரைப் படத்தின் தொடக்கவிழாவில் அதிதி சங்கர் கலந்து கொண்டார். அவர் அந்த விழாவில் அட்டகாசமாக ராம்ப்வாக் நடந்தார். அது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. ஷங்கர் மகள் திரைப்படங்களில் கவர்ச்சியிலும் கலக்குவார் என்பது இந்த ராம்ப்வாக் மூலம் தெரிய வருகிறது என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.