விருமனி'ன் வசூல் சாதனைக்காக பட குழுவினருக்கு வைரக்காப்பு பரிசு

  • IndiaGlitz, [Thursday,August 18 2022]

கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இதனால் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன், படத்தின் நாயகன் கார்த்தி, படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு வைரத்தினாலான காப்பை பரிசாக வழங்கி மகிழ்ந்தார். அத்துடன் 'விருமன்' படத்தை இயக்கிய இயக்குநர் முத்தையாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்து கௌரவித்தார்.

'விருமன்' படம் வெளியான ஐந்து நாட்களில் உலக அளவில் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, வசூல் சாதனை படைத்து வருகிறது. இதனை கொண்டாடும் வகையில் நேற்று சென்னையில் வெற்றி விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யாவிற்கும், இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியனுக்கும், படத்தின் நாயகனான கார்த்திக்கும் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டிருக்கும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் வைரக்காப்பினை பரிசாக அளித்தார். இந்த படத்தின் இயக்குநரான முத்தையாவிற்கும் வைர மோதிரத்தை பரிசளித்து உற்சாகப்படுத்தினார்.

நடிகர் சூர்யா 'விக்ரம்' படத்தில் நடித்ததற்காக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களிடமிருந்து விலையுயர்ந்த ரோலக்ஸ் கைகடிகாரத்தை பரிசாக பெற்றிருந்தார் என்பதும், தற்போது 'விருமன்' படத்திற்காக விநியோகஸ்தர் சக்திவேலனிடமிருந்து வைர காப்பினை பரிசாக பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'வெந்து தணிந்தது காடு' ஆடியோ விழாவில் இத்தனை பிரமாண்டமா?

சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

'ராக்கெட்டரி' படத்தால் சொந்த வீட்டை இழந்தாரா மாதவன்?

மாதவன் நடித்து இயக்கிய 'ராக்கெட்டரி' என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது என்பதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெள்ளை கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

'குக் வித் கோமாளி சீசன் 3' ஃபைனல்: திடீரென ரக்சன் வெளியேறியதற்கு இதுதான் காரணமா?

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிகழ்ச்சிகளில் ஒன்று 'குக் வித் கோமாளி என்பதும் இந்த நிகழ்ச்சியின் சீசன் 3 சமீபத்தில் முடிவடைந்தது

நிஜ வாழ்க்கையில் பிரேத பரிசோதனை அனுபவத்தை சந்தித்த அமலாபால்!

நடிகை அமலாபால் நடித்து தயாரித்த 'கடாவர்' என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீசாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் அவர் பிரேத பரிசோதனை

'வெந்து தணிந்தது காடு' படத்தில் இணைகிறாரா சூப்பர் ஸ்டார் ரஜினி?

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாக்கிய 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது.