விசாரணை பட நடிகரிடம் போலீஸ் விசாரணை

  • IndiaGlitz, [Wednesday,February 10 2016]

சமீபத்தில் வெளியான வெற்றிமாறனின் 'விசாரணை' உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் நான்கு அப்பாவி இளைஞர்களை போலீஸ் விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தும் காட்சிகள் பார்வையாளர்களின் மனதை பிழிந்த நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர் ஒருவரை உண்மையிலேயே கடந்த சில நாட்களுக்கு முன்னர் போலீஸ் விசாரணை செய்ததாக கூறப்படுகிறது.

'விசாரணை படத்தில் நான்கு விசாரணை கைதிகளில் ஒருவராக நடித்த பிரதீஷ் என்பவர் கடந்த ஞாயிறு அன்று சென்னை கோட்டூர்புரம் பகுதியில் தனது நண்பரின் வருகைக்காக காத்திருந்த நிலையில் அப்போது அந்த பகுதிக்கு வந்த காவல்துறையினர், நடிகர் பிரதீஷை சந்தேகப்பட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்ததாகவும், பின்னர் அவர் 'விசாரணை' பட நடிகர் என்று தெரிந்தவுடன் விட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து நடிகர் பிரதீஷ் கூறுகையில், அந்த பகுதியில் செயின் கொள்ளையர்கள் அதிகமாக இருப்பதால் வழக்கமான ரவுண்ட்ஸ் வரும் போலீஸார் என்னை சந்தேகப்பட்டு அழைத்து சென்றதாகவும் ஆனால் படத்தில் வருவது போன்று என்னை ட்ரீட் செய்யவில்லை என்றும் ஒருசில கேள்விகளை மட்டும் கேட்டுவிட்டு என்னைவிட்டு விட்டார்கள் என்றும் கூறினார்.

More News

விஜய்யை முந்தினார் எஸ்.ஏ.சந்திரசேகர்

இளையதளபதி விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் முக்கிய வேடத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'நையப்புடை'....

விஜய் பட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ள சமந்தா அடுத்து தனுஷ் மற்றும் வெற்றிமாறன்...

நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் ரீ எண்ட்ரி ஆகும் சின்னிஜெயந்த்

நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் கெளதம் கார்த்திக் ஆகியோர் முதன்முதலாக இணைந்து நடிக்கும் திரைப்படம்...

விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்' படத்தின் சென்சார் தகவல்

பிரபல இசையமைப்பாளராக கோலிவுட்டில் வலம் வந்த விஜய் ஆண்டனி, 'நான்' என்ற படத்தின் மூலம் ஹீரோவாகி அதன் பின்னர் சலீம்,...

தனுஷின் 'கொடி'யில் இருந்து ஷாமிலி நீக்கமா?

தனுஷ் நடித்து வரும் 'கொடி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்புடன் பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்று வருகிறது...