close
Choose your channels

விஷால்-ஆர்யாவின் 'எனிமி' டீசர் எப்போது?

Tuesday, June 15, 2021 • தமிழ் Comments

விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்து வரும் ‘எனிமி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகளும் நடைபெற்று வந்தது

’அரிமா நம்பி’ ’இருமுகன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. சற்றுமுன் படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவலின்படி ‘எனிமி’ திரைப்படத்தின் டீசர் ஜூன் 20ஆம் தேதி வெளியாகும் என்றும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

விஷால் ஜோடியாக மிருணாளினி நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தமன் இசையில், ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவில் உருவாகிவரும் இந்த படத்தை வினோத்குமார் என்பவர் தயாரித்து வருகிறார் என்பதும் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz