close
Choose your channels

விஷாலின் 25வது படத்தின் பூஜை! ரூ.6 கோடி செலவில் பிரமாண்டமான செட்

Thursday, August 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' மற்றூம் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் 'இரும்புத்திரை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் மோகன்லால் நடித்து வரும் 'வில்லன்' படத்திலும் அவர் முக்கிய வேடம் ஒன்றில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'சண்டக்கோழி 2' படத்தின் பூஜை இன்று சென்னை அருகே உள்ள பின்னி மில்லில் நடைபெற்றது. விஷாலின் 25 வது படமான இந்த படத்திற்காக மதுரை போன்ற செட் ஒன்று ரூ.6 கோடி செலவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இந்த படத்தில் கீர்த்திசுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகவுள்ள இந்த படத்தை விஷாலின் 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனம் தயாரிக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.