close
Choose your channels

விஷாலின் 28வது படம் குறித்த முழு தகவல் இதோ:

Friday, September 13, 2019 • தமிழ் Comments

நடிகர் விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஹாலிவுட் படங்களுக்கு இணையான ஆக்சன் காட்சிகள் அடங்கிய இந்த டீசருக்கு ரசிகர்களிடமிருந்து மாபெரும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் விஷாலின் அடுத்த படமான ’விஷால் 28’ படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளனர். ஒருவர் ரெஜினா, இன்னொருவர் ’நேர்கொண்ட பார்வை’ புகழ் ஷரதா ஸ்ரீநாத். இளம் இசைஞானி யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை ஆனந்த் என்ற அறிமுக இயக்குனர் இயக்க உள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் கண்ணன் கலை இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும் இந்த படத்தில் ரோபோ சங்கர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இதுவும் ஒரு அதிரடி ஆக்சன் படம் என்றும் கூறப்படுகிறது. ஒரே நாளில் விஷால் படத்தின் இரண்டு அப்டேட்கள் வந்திருப்பதால் விஷால் ரசிகர்கள் உச்சகட்ட குஷியில் உள்ளனர். 

Get Breaking News Alerts From IndiaGlitz