'ஒருத்தரும் உயிரோடு இருக்க மாட்டீங்க, அடிச்சு தூக்கிருவேன்'..  விஷாலின் 'ரத்னம்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Monday,April 15 2024]

இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகிய ‘ரத்னம்’ திரைப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த ட்ரெய்லரின் ரன்னிங் டைம் கிட்டத்தட்ட ஒன்றரை நிமிடங்களுக்கு மேல் இருக்கும் நிலையில் இதில் ஒரு நிமிடத்திற்கு மேல் அதிரடி ஆக்சன் காட்சிகள் தான் இருக்கின்றன என்பதும் விஷாலின் அதிரடி ஸ்டண்ட் காட்சி மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கிறது என்பதும் தெரிய வருகிறது.

காதலி பிரியா பவானி சங்கரை காப்பாற்றுவதற்காக விஷால் எடுக்கும் அதிரடி அவதாரம் தான் இந்த படத்தின் கதை என தெரிய வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து திருப்பதியை ஆந்திராவுக்கு பிரித்துக் கொடுத்த போது ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது.

’ஆந்திரா பார்டரை தாண்டி வரும் எந்த பஸ்ஸையும் விடக்கூடாது’ என சமுத்திரகனி ஆவேசமாக கூறுவதில் இருந்து அவர் தான் இந்த படத்தின் மெயின் வில்லன் என தெரிய வருகிறது. ’அந்த பொண்ணு என் உசுரு என் மூச்சு, அவள போய் அசிங்கப்படுத்தி இருக்க’ என்று ஆவேசமாக வசனம் பேசிக்கொண்டே வில்லனின் அடியாட்களை விஷால் அடித்து நொறுக்கும் காட்சிகள் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.

'நகரி இல்ல, சித்தூர் இல்ல, ஆந்திரா இல்ல, தெலுங்கானா இல்ல, எந்த ஊராக இருந்தாலும் தேடி வந்து செதுக்கிருவேன்’ என்ற விஷாலின் வசனம் அவரது ஆவேசமான கேரக்டரை வெளிப்படுத்துகிறது. இந்த படத்தில் கௌதம் மேனன் காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில் ’ஒருத்தரும் உயிரோடு இருக்க மாட்டீங்க, அடிச்சு தூக்கிருவேன்’ என்று வில்லன்களிடம் பேசும் வசனமும் சுவாரசியமாக உள்ளது.

இறுதியில் ’போலீஸ் டிபார்ட்மெண்டில் யாருக்காவது மெடல் கொடுக்க வேண்டும் என்றால் அது நம்ம ரத்னத்துக்கு தாண்டா கொடுக்கணும்’ என்ற சமுத்திரக்கனி வசனத்துடன் டிரைலர் நிறைவடையும் நிலையில் இந்த ட்ரெய்லர் உண்மையாகவே படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகி பாபு, கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

More News

கல்லூரியில் படிக்கும் போதே என்னை ஒருவன் ஏமாற்றிவிட்டான்: அஜித் பட நடிகையின் அதிர்ச்சி தகவல்..!

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை தான் கல்லூரியில் படிக்கும் போதே தன்னை ஒருவன் காதலித்து ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினி மாஸ் ஓபனிங் பாடலை முடித்துவிட்ட அனிருத்.. பிரம்மாண்டமான செட்டில் படப்பிடிப்பு..!

நீண்ட இடைவெளிக்கு பிறகு 'அண்ணாமலை', 'பாட்ஷா' மாதிரி 'வேட்டையன்' படத்தில் ரஜினிக்கு ஒரு மாஸ் ஓபனிங் பாடல் இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இந்த பாடல் தற்போது

ஜீ தமிழ் 'கனா' சீரியல் நடிகைக்கு இன்று திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'கனா' என்ற சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்த தர்ஷனா அசோகன் இன்று திருமணம் செய்து கொண்டதை அடுத்து இந்த திருமணத்திற்கு ஏராளமானோர் வருகை தந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இளைஞர் மத்தியில் ரத்த வெறியை தூண்டுகிறார்.. விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்..

இளைஞர் மத்தியில் ரத்த வெறியை தூண்டுகிறார் என நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் ஆன்லைனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம்.. முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து.. வைரல் புகைப்படம்..!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணம் இன்று சென்னையில் நடந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது மனைவியுடன்