'விஷால் 34' படத்தில் இணைந்த பிரபலம்.. ஹரியுடன் 5வது முறையாக இணைகிறார்..!

  • IndiaGlitz, [Saturday,July 15 2023]

விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாக இருக்கும் ’விஷால் 34’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவான ’யானை’ என்ற திரைப்படம் நல்ல வெற்றி பெற்றதை அடுத்து விஷால் உடன் ஹரி மீண்டும் இணைந்துள்ளார். ’தாமிரபரணி’, ’பூஜை’ ஆகிய படங்களை அடுத்து மூன்றாவது முறையாக விஷால் - ஹரி கூட்டணி இணைந்துள்ள நிலையில் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஹரி இயக்கத்தில் உருவான ’ஆறு’ ’சிங்கம்’ ’வேங்கை’ ’சிங்கம் 2’ ‘சாமி 2’ உள்ளிட்ட படங்களுக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்த நிலையில் தற்போது மீண்டும் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு அனேகமாக அடுத்த மாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

இந்த மாதிரி Movie பண்ணனும் ஆசை

India Glitz வழங்கும் CII Dakshin 2023 நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சினிமா துறையை சார்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் பங்குபெற்றனர்.

ஹாலிவுட் சினிமாவில் சூடு பிடித்திருக்கும் வேலை நிறுத்தம்… காரணம் தெரியுமா?

வித்தியாசமான கதையம்சங்களையும் பல புதிய தொழில் நுட்பங்களையும் கொண்டது ஹாலிவுட் சினிமா.

'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2' படத்தில் இவரா? சிம்புதேவனின் அடுத்த பட அறிவிப்பு..!

வடிவேலு நடித்த 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' மற்றும் விஜய் நடித்த 'புலி' உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் சிம்பு தேவன். இவர் 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' திரைப்படத்தின் இரண்டாம்

திடீரென வெளிநாட்டு சுற்றுப்பயணம் கிளம்பிய ரஜினிகாந்த்.. எங்கே சென்றார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென வெளிநாட்டு சுற்றுப்பயணம் அதாவது மாலத்தீவுக்கு சுற்றுலா பயணம் சென்றுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'மாவீரன்' பாசிட்டிவ் விமர்சனம்: சிவகார்த்திகேயன் மனைவிக்கு வாழ்த்து தெரிவித்த சங்கீதா விஜய்..!

 சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் முதல் நாள் முதல் காட்சி முடிந்த உடனே இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.