விஷால்-பாண்டியராஜ் படத்தின் டைட்டில்

  • IndiaGlitz, [Thursday,August 13 2015]

விஷால், காஜல் அகர்வால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பாயும் புலி' திரைப்படம் வரும் செப்டம்பரில் ரிலீஸாகவுள்ள நிலையில் விஷால் அடுத்து 'கொம்பன்' இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்திற்கு 'மருது' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.


இந்நிலையில் விஷால், தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்போது 'கதக்களி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக இந்த படத்தின் படப்பிடிபு சென்னையில் நடைபெற்று வருகிறது. மெட்ராஸ்' பட நாயகி கேதரின் தெரசா, இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

'கதக்களி' என்பது கேரளாவின் புகழ்பெற்ற ஒரு நடனக்கலையின் பெயர். எனவே இந்த படம் நடனம் சம்பந்தப்பட படமாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த டைட்டிலை இன்னும் படக்குழுவினர் உறுதி செய்யவில்லை என்றும் அதற்கு காரணம் 'கதக்களி' என்ற வார்த்தை மலையாள சொல்லாக இருப்பதால், இந்த டைட்டிலை வைத்தால் தமிழக அரசின் வரிவிலக்கு கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும் என்றும் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது..

More News

திருமணத்திற்கு பின் மீண்டும் ரீ எண்ட்ரி ஆன விஜய் நாயகி

ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தில் அறிமுகமான நடிகை ஜெனிலியா விஜய் நடித்த 'சச்சினி, வேலாயுதம்'...

தனுஷுக்கு 'தரலோக்கல்' என்றால் விஜய்க்கு 'உலக தரலோக்கல்?

சமீபத்தில் வெளிவந்த தனுஷின் 'மாரி' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தரலோக்கல்' பாடல் சூப்பர் ஹிட் ஆகியது என்பதை அனைவரும் அறிவோம்...

சிம்பு ரசிகர்களால் கதிகலங்க போகுதா காசி தியேட்டர்?

பல்வேறு தடைகளை தாண்டி வரும் வெள்ளியன்று பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள 'வாலு' திரைப்படம் குறித்துதான் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகிவருகிறது...

சிம்புவின் 'வாலு'வுக்கு குவியும் வாழ்த்துக்கள்

பலவிதமான தடைகளை தாண்டி சிம்புவின் 'வாலு' திரைப்படம் வரும் 14ஆம் தேதி வெற்றிகரமாக உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது...

சென்னை, கும்பகோணம், பொள்ளாச்சியில் அரண்மனை 2

கோலிவுட்டில் பேய்ப்பட சீசன் தொடங்கிய ஆரம்பகட்டத்தில் வெளிவந்த சுந்தர் சியின் 'அரண்மனை' சூப்பர்ஹிட் ஆகியதை தொடர்ந்து....