சூப்பர் ஹிட் தெலுங்கு பட ரீமேக்கில் விஷால்-ராஷிகண்ணா

  • IndiaGlitz, [Wednesday,March 21 2018]

கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த 'டெம்பர்' தெலுங்கு படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. ஜூனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால் நடித்த இந்த படத்தை பூரிஜெகந்நாத் இயக்கியிருந்தார்

இந்த படத்தின் வெற்றியை அடுத்து இந்த படம் பலமொழிகளில் ரீமேக் செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. குறிப்பாக இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும், இந்த படத்தில் ரன்வீர்சிங் மற்றும் சயித் அலிகான் மகள் சாரா அலிகான் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ரோஹித் ஷெட்டி இயக்கவுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இதே டெம்பர் திரைப்படம் தமிழிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதில் ஜுனியர் என்.டி.ஆர் வேடத்தில் விஷால் மற்றும் காஜல் அகர்வால் வேடத்தில் ராஷி கண்ணா நடிக்கவுள்ளனர். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர் ' படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்த வெங்கட்மோகன் இயக்கவுள்ளார். சாம் சி.எஸ் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தை லைட் ஹவுஸ் மூவிமேக்கர் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.

More News

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த முக்கிய அப்டேட்

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'சீமராஜா' படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடியுந்தருவாயில் உள்ளதால் ஸ்டிரைக் முடிந்தவுடன் ஒருசில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும்

முதல் ஆளாக பத்ம விருதை பெற்ற இசைஞானி இளையராஜா!

இசைஞானி இளையராஜா 2018-ம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருதை குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றார். இன்றைய நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட முதல் விருது இசைஞானிக்கு என்பது குறிப்பிடத்தக்கது

சிஎஸ்கே அணியில் விளையாட வேண்டும் என்பது எனது கனவு: தினேஷ் கார்த்திக்

இலங்கையில் நடந்த மூன்று நாடுகள் டி20 கிரிக்கெட் போட்டியில் கடைசி இரண்டு ஓவர்களில் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்த தினேஷ் கார்த்திக்,

தளபதி விஜய்யை கலாய்த்த காமெடி நடிகர்

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பை நடத்த தயாரிப்பாளர் சங்கத்திடம் சிறப்பு அனுமதி பெற்று இன்று படப்பிடிப்பு நடந்தது

கடைசி ஒரு பந்தில் 5 ரன், மனநிலை எப்படி இருந்தது: தினேஷ் கார்த்திக்

சமீபத்தில் இலங்கையில் நடந்த மூன்று நாடுகளுக்கு இடையிலான டி20 போட்டியின் இறுதிபோட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி,