விஷால் - விஜய் சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான பதிவுக்கு குவியும் லைக்ஸ்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர்கள் விஷால் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும், தற்செயலாக சென்னை விமான நிலையத்தில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட நிலையில், சில நிமிடங்கள் பேசியதாக நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
"என் இனிய நண்பர், பல திறமைகள் கொண்ட விஜய் சேதுபதி அவர்களை சென்னை விமான நிலையத்தில் சந்தித்தேன். எப்போதும் போல அவர் மிகுந்த உற்சாகத்தோடு இருந்தார். அவரை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. சில நிமிடங்கள் மட்டுமே பேச முடிந்தாலும், அவை எனக்கு மிகவும் சிறப்பான தருணங்களாக இருந்தது. அவருடைய எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும். மீண்டும் விரைவில் சந்திப்போம் என்று நம்புகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
விஷாலின் இந்த நெகிழ்ச்சியான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பதும் லைக்ஸ்கள் கமெண்ட்ச் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது..
விஷால் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும், பார்த்திபனின் 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர் என்பதும், அது தவிர வேறு எந்த படத்திலும் இருவரும் இணைந்து நடிக்கவில்லை என்றாலும், அவ்வப்போது நட்புடன் சந்தித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Met my darling friend, the most versatile @VijaySethuOffl at Chennai airport. Always nice to see him, he’s full of energy and it's been a long time since I met him. It was really really nice to converse with him even though it was for few minutes.
— Vishal (@VishalKOfficial) May 17, 2025
All the best darling for your… pic.twitter.com/zAIXVJKw8y
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com