close
Choose your channels

விஷாலின் அரசியல் அமைப்பின் பெயர் அறிவிப்பு

Wednesday, August 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஷால் இன்று நடைபெறும் 'இரும்புத்திரை' படத்தின் 100வது நாள் விழாவில் தனது ரசிகர் மன்றங்களை அரசியல் அமைப்பாக மாற்றி புதிய கொடியை அறிமுகம் செய்யவுள்ளார் என்ற செய்தியை நமது வாசகர்களுக்கு சற்றுமுன் தெரிவித்தோம். அதன்படி நடிகர் விஷால் 'மக்கள் நல இயக்கம்' என்ற தனது அமைப்பின் பெயராக அறிவித்து அதன் கொடியையும் அறிமுகம் செய்துள்ளார். இந்த அமைப்பின் கொடியில் விவேகம், வித்தியாசம், விடாமுயற்சி மற்றும் அணி சேர்வோம், அன்பை விதைப்போம் என்ற வாசகம் உள்ளது

விஷால் நற்பணி இயக்கத்தை மக்கள் நல இயக்கமாக நடிகர் விஷால் மாற்றியுள்ள நிலையில் இந்த இயக்கம் அடுத்ததாக அரசியல் அமைப்பாகவும் பரிணாமம் ஆகும் என்'று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இன்று நடந்த 'இரும்புத்திரை' விழாவில் ,'திருப்பரங்குன்றம் தேர்தல் வரவுள்ளது, மதுரை நம்ம மண்' என்று பேசியுள்ளதால் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.